கேள்வி :- மாட்டிறைச்சியைத் தடை செய்துள்ளதே மகாராட்டிர அரசு?
பதில் :- பசு/காளை மாட்டிறைச்சியைத்தான் தடை செய்துள்ளது. மாட்டினத்தில் தாழ்த்தப்பட்ட கருமை நிற எருமை மாட்டை வெட்டலாம் உண்ணலாம்.
வெளிப்படையாகப் பார்த்தால் காவித்தனமாக இருந்தாலும் இதன் பின்னர் வியாபரத் தந்திரமொன்றுள்ளது. கோமாதா எங்கள் குலமாதா பாடும் நாம்தான், உலகளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முன்னணியில் இருக்கின்றோம்.
மராட்டியம் போன்ற பெரிய மாநிலத்தில் பசு/காளை மாட்டிறைச்சியைத் தடை செய்வதன் மூலம், உள்நாட்டுப் பயன்பாட்டை நிறுத்தி, வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து பெரும் லாபமீட்டலாம்.
உள்ளூரில் ஒரு பொருளை ஒரு ரூபாய்க்கு விற்பது லாபமா அல்லது அதே பொருளை வெளியூரில் ஒன்பது பவுண்டுகளுக்கு விற்பது லாபமா என்பதை நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள்.
காவி”யவாதம் என்பது சாக்கு, வர்த்தகம் என்பதே நிஜமான போக்கு. எருமை மாட்டிறைச்சியை விட்டுவைக்கக் காரணம், ஏற்கெனவே மராட்டியம் இந்திய அளவில் மிகப் பெரிய எருமை இறைச்சி ஏற்றுமதியாளர். லாபமில்லாத காவித்தனம் என்பதில்லை.
– முகநூலில் கிளிமூக்கு அரக்கன்