தமிழ்த் திரையுலகத்துக்கு 2010 ஆம் ஆண்டுக்கான தேசிய விருதுகள் பட்டியலில் குறிப்பிடத்தக்க இடம். ஆம்! சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதையாசிரியர் என இரண்டு விருதுகள் ஆடுகளம் திரைப்படத்திற்காக வெற்றிமாறனுக்கு! சிறந்த நடிகராக தனுஷ், சிறந்த நடிகையாக சரண்யா பொன்வண்ணன், சிறந்த துணை நடிகராக தம்பிராமையா, சிறந்த பாடலாசிரியராக ஆறாவது முறையாக கவிப்பேரரசு வைரமுத்து, இதுபோக சிறந்த தொழில் நுட்பக் கலைஞர்கள் என 14 விருதுகள் தமிழ்நாட்டுக்கு! பெரிதாகப் பத்திரிகைகள் விளம்பரப்படுத்தினவா?
என்ன செய்வது மேற்கண்டோர் தோள்களில் தொங்குகிறதா பூணூல்? அதனால் அமுக்கி அடக்கி வாசிக்கின்றன ஊடகங்கள். திரைக்கலைஞர்கள் நிலையே இப்படியென்றால் 24 ஆண்டுகளுக்குப் பிறகு திரைப்படம் குறித்த சிறந்த நூலுக்கான விருதைப் பெற்றிருக்கும் தமிழ் நூலான திரைச்சீலை நூலையும் அதன் ஆசிரியர் ஓவியர் ஜீவாவையும் நம் ஊடகக்காரர்கள் கண்டுகொள்ளவா போகிறார்கள்?
நாம் பாராட்டுவோம்… வாழ்த்துவோம்… இன்னும் உயரவைத்துக் கொண்டாடு வோம் நம்மினத்தோரை!