இந்தியாவில் சிறுபான்மையினர், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் அதிகரித்துள்ளதாக பன்னாட்டு மனித உரிமைக் கண்காணிப்பு ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு உத்தரபிரதேசம், முசாபர் நகரில் ஏற்பட்ட கலவரம் முதல் அண்மையில் பிகார் மாநிலத்தில் நடந்த கலவரம் வரை குறிப்பிட்ட மதத்தின்மீது கடுமையான தாக்குதல்கள் நடை-பெற்றுள்ளன. இந்தத் தொடர் தாக்குதலின்-மூலம் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்-துள்ளனர்.
தொடர்ந்து நடைபெற்றுவரும் மனித உரிமை மீறல்களைத் தடுக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களைச் சுதந்திர-மாகச் செயல்பட அனுமதித்துள்ளது கண்டிக்கத்தக்கது.
ஆந்திரா, ராஜஸ்தான், ஜார்கண்ட் போன்ற நகரங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. முக்கியமாக மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ள இந்த மாநிலங்களில் உள்ள தாழ்த்தப்பட்டவர்கள் மிரட்டி வற்புறுத்தலுக்கு ஆளாகின்றனர். மத்திய அரசு இந்த அவலத்தை நீக்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் அமைதி காத்து வருகிறது.
அண்மையில் பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துவரும் நிலையில் எந்தவிதப் பாதுகாப்பும் அளிக்க அரசு முன்வராததால் குற்றவாளிகளுக்குத் துணிச்சல் ஏற்பட்டுவிடுகிறது.
இந்தியாவில் 13 விழுக்காடு குழந்தைத் தொழிலாளர்கள் ஆரம்பக் கல்வியைக்கூட முடிக்காத நிலையில் இருப்பதாக அண்மையில் எடுக்கப்பட்ட புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன. சில குழந்தைத் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக மாற்றப்படுகின்றனர்.
தடுக்க வேண்டிய அரசுகளோ கண்ணை மூடிக்கொண்டு இருக்கின்றன என பன்னாட்டு மனித உரிமைக் கண்காணிப்பு ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்-பட்டுள்ளது.