புதுப்பா
முகங்கள்
அண்ணனுக்கு ஆனைமுகம்
தம்பிக்கு ஆறுமுகம்
தந்தைக்கும் தாய்க்கும்
பாதிப் பாதி முகம்
பக்தனே நீ எந்த முகத்தோடு
கோவிலுக்குப் போகிறாய்?
– வீ.உதயக்குமாரன், வீரன்வயல்.
புதுப்பா
பாதையை மாற்று!
விரும்பியதை விரும்பு – உன்னை
விரும்பியதை விரும்பு!
எறும்புக்குத் தெரியாதா
கரும்பின் சுவை!
கண்ணின் பார்வை
காணும் தூரம் மட்டும்!
அறிவின் பார்வையோ
ஆகாயத்தை எட்டும்!
கீதையைப் போற்றாதே!
பாதையை மாற்று! – பெரியார்
பாதைக்கு மாற்றேது!
– சீர்காழி கு.நா.இராமண்ணா