கருத்து
’மேக் இன் இந்தியா’ மூலம் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுகிறார் பிரதமர் மோடி. ஆனால், வெளிநாட்டுத் தயாரிப்புகளை இந்தியாவில் விற்க சங்பரிவாரின் பொருளாதாரப் பிரிவான ஸ்வதேசி ஜாக்ரண் மஞ்ச் எதிர்ப்புத் தெரிவிக்கிறது. என்ன முரண் இது?
– திக்விஜய் சிங்
காங்கிரஸ் பொதுச்செயலாளர்
மதச்சார்பின்மை மற்றும் சோஷலிசம் என்ற வார்த்தைகளை அரசியல் சட்டத்தின் முகவுரையிலிருந்து நீக்க வேண்டும் என சிவசேனா தெரிவித்துள்ளது அழிவை ஏற்படுத்தக்கூடியது; கண்டிக்கத்தக்கது மற்றும் வெறுக்கத்தக்க அறிக்கையாகும். அறியாமையின் வெளிப்பாடே அந்த அறிக்கை மதச்சார்பின்மை அவசியம் இல்லை என சொல்வது கவலை தருவதாக உள்ளது.
– ஜிதன்ராம் மாஞ்சி
பிகார் முதல்வர்
மத சுதந்திரம் மற்றும் பன்மைத்துவம் மிகுந்த இந்தியா, தற்போது வெறுப்பு, பெரும் பான்மைத்துவம் மற்றும் சகிப்புத் தன்மை இல்லாத நாடாக மாறியிருக்கிறது. புதிய அரசு பதவியேற்ற முதல் 100 நாட்களில், சிறுபான்மை கிறித்தவர்களுக்கு எதிரான தாக்குதல்களை இந்து தேசியவாதிகள் அதிகரித்து இருப்பதாக என்.ஜி.ஓ.க்களின் ஆவணங்-களின் தகவல்கள் கூறுகின்றன.
– ஜோ பிட்ஸ்,
அமெரிக்காவின் குடியரசு
கட்சியைச் சேர்ந்த செனட் சபை உறுப்பினர்.
தேர்தல் சட்டத் திருத்தம் வருகின்ற நேரத்தில் இந்தியாவில் பல்லாண்டு-களாகப் பலராலும் சொல்லப்-பட்டு வருகின்ற விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை பற்றியும் மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
– கலைஞர், தி.மு.க. தலைவர்
மனிதனின் வாழ்க்கை உயர்வடைய புத்தகங்கள் மிகவும் முக்கிய-மானவை. ஒருவன் தலைகுனிந்து-படிப்பது-தலைநிமிர்ந்து வாழ்வதற்கே. உலக அளவில் மிகப்பெரிய மாற்றங்களை உருவாக்கியவை புத்தகங்களே. புத்தகம் என்பது ஒவ்வொரு முறை திறக்கும்-போதும் வெடிக்கக்கூடிய சக்தி படைத்தது. சாதாரண மனிதனைக்கூட சாதனை மனிதனாக்க புத்தகங்களால் முடியும்.
– இரா.தாண்டவன்,
சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர்.
சொல்றாங்க...
அய்க்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புக் கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமெரிக்கா ஆதரவு கொடுக்கும்.
– ஒபாமா, அமெரிக்க அதிபர்
சொல்றேங்க…
அமெரிக்காவா? நம்ப வைத்துக் கழுத்த அறுக்காம இருந்தா சரி!
இந்தியா_பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது. இந்த நிலையில் இந்தியாவுக்கு அய்.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர இடம் கிடைக்க அமெரிக்கா ஆதரவு அளிக்கக் கூடாது.
– சர்தாஜ் அஜிஸ்,
தேசிய பாதுகாப்பு ஆலோசகர், பாகிஸ்தான்.
ஏன் சீனாதான் நெருக்கமா இருக்கே, அங்க விண்ணப்பித்தாப் போச்சு!