மோடி ஏன் மறுக்கவில்லை?

பிப்ரவரி 16-28

மோடி ஏன் மறுக்கவில்லை?

இந்தியாவில் மதச் சிறுபான்மையர் மீதான வன்முறைத் தாக்குதல்கள் குறித்துக் குறிப்பிடும் போது, மோடியின் மவுனம் ஆபத்தானது என்று அமெரிக்காவிலிருந்து வெளிவரும் நியூயார்க் டைம்ஸ் இதழின் தலையங்கம் குறிப்பிட்டுள்ளது.

கிறித்தவர்களின் வழிபாட்டிடங்கள்மீதான தாக்குதல்களை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, இந்தியாவில் அனைத்துக் குடிமக்களையும் காப்பாற்ற வேண்டியராக உள்ள பிரதமர் மோடி, எவ்விதக் கருத்தும் தெரிவிக்காமல் உள்ளார்.

அதேபோல், கிறித்தவர்கள் மற்றும் இசுலாமியர்கள் அதிக அளவில் கட்டாயப்-படுத்தி அல்லது பணம் கொடுப்பதாக உறுதியளித்து இந்து மதத்துக்கு மாற்றம் செய்யப்படுவது குறித்தும் எந்தக் கருத்தும் வெளியிடாமல் உள்ளார்.

மத சகிப்புத்தன்மை இல்லாத நிலை அதிகரித்து இதுபோன்ற தொல்லைகள் இருந்தபோதிலும்,  மோடி தொடர்ச்சியாக அமைதியாக இருப்பதன் மூலம், இந்து தேசியவாதிகளின் உரிமைகளைக் குறித்த எல்லைகளுக்குள் கட்டுப்படுத்த முடியவில்லை அல்லது கட்டுப்படுத்த விரும்பவில்லை என்பதைக் காட்டுகிறது.

அண்மையில் இந்தியாவில் உள்ள ஏராளமான கிறித்தவ வழிபாட்டிடங்கள் தீக்கிரையாக்கப்பட்டு சூறையாடப்பட்டன. கடந்த டிசம்பரில் கிழக்கு டில்லியில் செயின்ட் செபாஸ்டியன் சர்ச் முழுவதுமாக தீக்கிரை-யாக்கப்-பட்டது.

கிறித்தவ மதபோதகர் கூறும்போது, புகைமண்டலமாக இருந்தபோது மண்ணெண்ணெய் மணம் வெளிவந்ததாகக் கூறியுள்ளார். டில்லியில் அண்மையில் தீய நபர்களால் செயின்ட் அல்போன்சா சர்ச் தீவைத்து எரிக்கப்பட்டது. சடங்குகளுக்குப் பயன்படுத்தும் பொருள்களை எடுத்துச் சென்றுள்ளனர். ஆனால், பணம் நிறைந்திருந்த உண்டியல் பெட்டியை அவர்கள் தொடவில்லை.

கத்தோலிக்க ஆயர்களின் மாநாட்டில் இந்தியாவுக்கே உரிய மதச் சார்பின்மையை நிலைநிறுத்த அரசுக்குக் கோரிக்கை விடப்பட்டுள்ளது. இந்தியாவில் கிறித்தவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள், சொந்த நாட்டில் பாதுகாப்பாக உள்ளார்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும்.

மாபெரும் அளவிலான மதமாற்றங்கள் குறித்தும் கவலைகளைத் தெரிவித்துள்ளனர். ஆக்ராவில் கடந்த டிசம்பரில் 200 முசுலீம்கள் இந்து மதத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஜனவரியில் மேற்கு வங்கத்தில் நூறு கிறித்தவர்கள்வரை மறு மதமாற்றம் என்கிற பெயரில், இந்துமதத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இந்து தேசியவாதக் குழுக்களாக உள்ள விஸ்வ இந்து பரிஷத், ராஷ்டிரிய சுயம் சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்) ஒளிவுமறைவின்றி தாய்மதம் திரும்புதல் என்கிற பெயரில் பிரச்சாரத்தைச் செய்து இந்துக்கள் அல்லாதவர்களை மீண்டும் இந்து மதத்துக்குத் திரும்பச் செய்வதாகக் கூறுகிறார்கள்.

இந்தியாவில் 80 விழுக்காட்டினருக்கும் மேலாக இந்துக்கள் உள்ளனர். ஆனால், விஸ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சார்ந்த  பிரவீன் தொகாடியா கூறும்போது, அவருடைய அமைப்பான வி.எச்.பி., நாட்டில், நூறு விழுக்காட்டளவில் இந்துக்களாக ஆக்குவது-தான் இலக்கு என்று கூறியுள்ளார். அதற்கு ஒரே வழி மதச்சிறுபான்மையரின் மத நம்பிக்கைகளை மறுப்பதுதான்.

அயோத்தியில் 3,000 முசுலீம்களை ஒரே நேரத்தில் மதமாற்றம் செய்ய உள்ளதாக வி.எச்.பி. கூறுகிறது. இந்துத்துவத் தீவிரவாதிகளால் 1992ஆம் ஆண்டில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது, நாடுமுழுவதும் ஏற்பட்ட வன்முறைக் கலவரங்களில் 2000பேர் உயிரிழந்தனர்.

நெருப்போடு விளையாடுவதை வி.எச்.பி. தெரிந்தே செய்கிறது. மோடியின் விருப்பமான திட்டமாக இந்தியாவின் வளர்ச்சிக்கு உறுதி அளித்திருந்தார். ஆனால், புதுடில்லியில் கடந்த மாதம் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா  மதவாதங்களால் பிரித்துக் கொண்டிருக்கும் வரை, இந்தியா வெற்றி பெறவே முடியாது என்று கூறியுள்ளார். மத சகிப்புத் தன்மையற்ற தன்மையில் கேளாக்காதாக உள்ள மோடியின் அமைதியை  உடைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *