துளிச் செய்திகள்

பிப்ரவரி 01-15
  • பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தின் உறுப்பினர் நாடாக பாலஸ்தீனம் ஜனவரி 6 அன்று இணைந்துள்ளது.
  • வெளிநாடு வாழ் இந்தியர்கள் மின்னணு முறையில் ஓட்டளிக்கத் தேவையான ஏற்பாடுகளை எட்டு வாரங்களுக்குள் செய்துதர மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஜனவரி 12 அன்று ஆணையிட்டது.
  • அய்ரோப்பிய நாடான குரோஷியாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் கொலிந்தா கிரயா கிதாரொவிச் வெற்றிபெற்று அந்நாட்டின் அதிபர் பதவி ஏற்கும் முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
  • சுரங்க முறைகேடு வழக்கில் கைதாகி சிறையிலிருந்த கருநாடக மேனாள் அமைச்சர் ஜனார்த்த ரெட்டிக்கு 40 மாதங்களுக்குப் பின்னர் ஜனவரி 20 அன்று நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் ஆணையிட்டது.
  • பயங்கரவாதிகள் மீதான வழக்கை விரைந்து விசாரிப்பதற்காக சிறப்பு ராணுவ நீதிமன்றங்கள் ஏற்படுத்த வகை செய்யும் அரசியல் சாசனத் திருத்த மசோதாக்கள் இரண்டினை பாகிஸ்தான் அரசு ஜனவரி 3 அன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு, அவை ஜனவரி 6 அன்று நிறைவேற்றப்பட்டன.
  • சத்தீஸ்கர் மாநிலம் ராய்கர் மாநகராட்சித் தேர்தலில் மேயர் பதவிக்குப் போட்டியிட்ட திருநங்கை மதுகின்னார் வெற்றி பெற்றுள்ளார்.
  • சவுதி அரேபியா நாட்டில் மன்னர் அப்துல்லா ஜனவரி 23 அன்று மரணம் அடைந்ததை அடுத்து புதிய மன்னராக சல்மான் அறிவிக்கப்-பட்டுள்ளார்.

 


 

 

இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *