ஒபாமா வருகையை ஒட்டி இருவரின் உடைகள் பற்றிய பேச்சுகள் ஊடகங்களை ஆக்கிரமித்தன. ஒருவர் ஒபாமாவின் மனைவி மிஷெல் மற்றொருவர் நரேந்திர மோடி. ஒரே நாளில் மூன்று உடைகளை மாற்றி மொத்த ஊடகங்களையும் தன் வசப்படுத்தி வெற்றியும் பெற்றார் மோடி. இந்தப் படத்தில் அவர் அணிந்திருக்கும் கருநீல உடையில் கோடுகளை நீங்கள் காணலாம்; இந்த கோடுகளை ஜூம் செய்து பார்த்தால் அவை எல்லாம் NARENDRA DAMODARDAS MODI என்று இருக்கும். இப்படி தன் சொந்த பெயரை தன் உடையின் துணி முழுவதும் நெய்து வாங்கியவர் இவருக்கு முன்பாகவே ஒருவர் இருக்கிறார், அவர் தான் எகிப்து முன்னாள் கொடுங்கோல் அதிபர் ஹோஸ்னி முபாரக்.
– எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணன் முகநூலிலிருந்து
Leave a Reply