போதை… கீதை…
சரக்கு போதையில் சொர்க்கத்துக்குப் போகலாம் என்று கிருஷ்ண பகவானே கீதையில் சொல்கிறார் கேளுங்கள்.
த்ரைவித்யா மாம் ஸோமாபா: பூத பாபா யஜ்ஞைரிஷ்ட்வா ஸ்வர் கதிம் ப்ரார் தயந்தே தே புண்யமாஸாத்ய ஸுரேந்த்ர லோகம் அஷ்நந்தி திவ்யாந்திவி தேவபோகான் சுவர்க்க உலகங்களை நாடி, வேதங்களைப் பயின்று ‘ஸோம ரச’த்தை அருந்துபவர்களும் என்னையே மறைமுகமாக வழிபடுகின்றனர்.
அவர்கள் இந்திரனின் உலகத்தில் பிறவியெடுத்து தேவர்களின் இன்பங்களைச் சுகிக்கிறார்கள்.
-பகவத்கீதைஅத்யாயம்9.பதம்20
பேச்சு வழக்கில், ”போதை கீதை ஏத்திக்கப் போற…. ஒழுங்கா வந்து சேர்” என்பார்கள். ஆமாம், போதை, கீதை ரெண்டும் வேண்டாம்.
– க.அருள்மொழி, குடியாத்தம்