கருத்து

ஜனவரி 16-31

பா.ஜ.க.வும் அதன் தலைவர்களும் மதத்தை அடிப்படையாக வைத்து அரசியல் நடத்துகின்றனர். இது மோசமான விளைவு-களை ஏற்படுத்தும். இதை உணராமலேயே அவர்கள் தொடர்ந்து மக்களைத் தவறாக வழி நடத்துகின்றனர்.

– அகிலேஷ் யாதவ், உ.பி. முதல் அமைச்சர்

விநாயகனின் தலையில் யானையின் தலையைப் பொருத்தியதன் மூலம் புராண காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி முறை தொடங்கிவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியிருக்கிறார். இதுபோன்ற கருத்துகள் வரலாற்றைத் திரிப்பதாகும்.

இவ்வாறு திரிக்கப்படும் வரலாற்று உண்மைகள் பள்ளிப் பாடப் புத்தகங்களில் இடம்பெற உள்ளதாகவும் கூறப்படுவது கவலைக்குரியது.

– இந்திய வரலாற்று ஆய்வுக் கவுன்சில்

நமது நாட்டில் சட்டங்களுக்கும் நலத் திட்டங்களுக்கும் குறைவில்லை. ஆனால் அவற்றை அரசு இயந்திரம் சரியாக அமல்படுத்துவதில்லை. இதனால் பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், ஏழை எளிய மக்கள், சமூக_பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் நடைபெறுகின்றன. நம் நாட்டில் மனித உரிமை பற்றிய விழிப்புணர்வு அவ்வளவாக இல்லை.

– நீதிபதி டி. முருகேசன், மனித உரிமை ஆணைய உறுப்பினர்.

பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கீழ் இந்தியா இருந்தபோது பெண்களின் சுதந்திரம் குறித்த சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது பெண்கள் பல முக்கிய கார்ப்பரேட் நிறுவனங்களின் தலைவர்-களாக உள்ளனர். இருந்தும் பெண் குழந்தைகள் இறப்பு, பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், கடத்தல் உள்ளிட்ட சம்பவங்கள் நடக்கின்றன. அய்.நா. அறிக்கையின்படி பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.

சமூகத்தில் உள்ள அனைத்துத் தளங்களிலும் பெண்களின் பங்கை அதிகப்படுத்த வேண்டும். அதன்மூலம் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த முடியும்.

– நீதிபதி ராமசுப்பிரமணியன், சென்னை உயர் நீதிமன்றம்.

பா.ஜ.க. மத்தியில் ஆட்சிக்கு வந்ததிலிருந்து அரசு நிருவாகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம் அதிகமாகிவிட்டது. திட்டக் கமிசனுக்குப் பதிலாக உருவாக்கப்பட்டுள்ள புதிய அமைப்பிலும் ஆர்.எஸ்.எஸ். ஆதிக்கம்தான் நிலவுகிறது. ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர்கள்தான் இந்தக் குழுவில் உறுப்பினர்களாக இடம் பெற்றுள்ளனர். இதுபோன்ற நடவடிக்கைகள் நாட்டின் நிர்வாகத்தையே கேலிக் கூத்தாக்கிவிடும்.

– தருண் கோகாய், அசாம் மாநில முதல் அமைச்சர்.

தற்போது முன்னேறி வருகின்ற இந்தக் காலம் அறிவுக் களஞ்சியங்களைக் கொண்ட உலகம் ஆகும். இந்த அறிவு உலகத்தில் மாணவர்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள பாடப் புத்தகங்-களையும் தாண்டி மற்ற புத்தகங்களையும் படிக்க வேண்டியது அவசியம் ஆகும். புத்தக வாசிப்பை சுகமான மற்றும் சுலபமான ஒரு அனுபவமாக மாணவர்கள் கருத வேண்டும்.

– சி.சைலேந்திர பாபு, ஏடிஜிபி தமிழக கடலோரக் காவல்படை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *