கர்மவீர பூமிபுத்திர நாதுராம்ஜீ கோட்சே திரைப்படம் விரைவில்

ஜனவரி 16-31

கர்மவீர பூமிபுத்திர நாதுராம்ஜீ கோட்சே
திரைப்படம் விரைவில்

ஜனவரி 30 வெளியீடாம்

நாதுராம் கோட்சேவைத் தூக்கிலிட்ட தினமான நவம்பர் 15 அவரது நினைவு நாளாக கடந்த ஆண்டு (2014) மகராஷ்டிரா முழுவதும் கடைப்பிடிக்கப்-பட்டது. மகராஷ்டிரா மாநிலம் பன்வேலில் நடந்த ஒரு பொதுக்-கூட்டத்தில் பேசிய இந்து மகாசபை செய்தித் தொடர்பாளர் தினேஷ் போன்சலே கூறியதாவது:

நாம் இன்று ஷஹூரிய திவஸ் (வீரர்களின் நினைவுநாள்) கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். நாம் இந்து தேசத்திற்காகப் பாடுபட்ட வீரர்களை என்றும் நினைவில் கொள்ள வேண்டும். நமது இந்துமதப் பாதுகாப்பிற்காக நாதுராம் கோட்சே தனது இன்னுயிரை ஈந்த நாள் இன்று.

இந்த நாளை நாடுமுழுவதும் கொண்டாடி வருகிறோம். நாங்கள் இன்றும் நாதுராம் கோட்சேவின் சாம்பலைப் போற்றிப் பாதுகாத்து வருகிறோம். அதை அகண்ட பாரதமான பிறகு சிந்து நதி கடலில் கலக்கும் இடத்தில் (காராச்சி,-பாகிஸ்தான்) கரைப்போம். இது எங்கள் சத்தியப் பிரமாணம்.

இதை வரும்  தலைமுறைக்கு எடுத்துக்கூறவே இந்த நாளை உங்களுக்கு நினைவுப்-படுத்துகிறோம். வரும் தலைமுறைக்கு நாதுராம் கோட்சேவின் உண்மையான வரலாற்றை எடுத்துக்கூறும் விதமாக கர்மவீர பூமிபுத்திர நாதுராம்ஜீ கோட்சே (தற்போது தேஷபக்த் கோட்சே என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற திரைப்படத்தை ஜனவரி 30-ஆம் தேதி வெளியிட இருக்கிறோம்.

உண்மையான தேசபக்தனின் வரலாற்றை அனைத்து இந்துக்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறினார். கோட்சேவுக்கு சிலை வைக்க இடங்-களைத் தேர்வு செய்துவிட்டதாகக் கூறும் இவ்வமைப்பு இப்படியொரு படத்தை வெளியிட்டாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *