Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

குழந்தைகளுக்குக் கொடூரமான ஆண்டு

2014ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் நடைபெற்றுள்ள பல்வேறு வன்முறைகளில்  ஒரு கோடியே அய்ம்பது லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கடந்த ஆண்டினை குழந்தைகளுக்கு எதிரான ஆண்டாக அய்.நா.அவையின் குழந்தைகள் நல நிதியம் அறிவித்துள்ளது.

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, ஈராக், தெற்கு சூடான், சிரியா, உக்ரைன், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பகுதிகளில் நடந்த பல்வேறு வன்முறைச் சம்பவங்களால் பல லட்சம் குழந்தைகள் தங்கள் நாடுகளை இழந்து அகதிகளாக வாழ்கின்றனர்.

ஈராக், சிரியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் சுமார் 6 கோடியே 80 லட்சம் குழந்தைகள் போலியோ நோயால் தாக்கப்-பட்டுள்ளனர். தெற்கு சூடானில் 70 ஆயிரம் குழந்தைகள் சத்துக் குறைவால் சிகிச்சை பெற்றுள்ளனர் என்று அய்.நா. அவையின் குழந்தைகள் நல நிதியம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.