பதிவுகள்

மே 16-31
  • காமன்வெல்த் போட்டி ஏற்பாடுகளில் நடந்த கோடிக்கணக்கான ரூபாய் ஊழல் தொடர்பாக சி.பி.அய். அதிகாரிகள் சுரேஷ் கல்மாடியை ஏப்ரல் 25 அன்று கைது செய்தனர்.
  • குற்றம் செய்ததற்காக விதிக்கப்பட்ட தண்டனைக் காலத்துக்குப் பிறகும் அரசு ஊழியர்களின் பதவி உயர்வுக்குத் தடையை ஏற்படுத்தும் விதத்தில் பிறப்பிக்கப்பட்ட அரசாணைகள் சட்ட விரோதமானவை என்று ஏப்ரல் 27 அன்று சென்னை உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.
  • திபெத் அரசின் புதிய பிரதமராக லாப்சங் சாங்கே ஏப்ரல் 27 இல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • லிபியத் தலைவர் கடாபியின் குடியிருப்பின்மீது நேட்டோ விமானப் படைகள் ஏப்ரல் 30 அன்று குண்டுவீசித் தாக்கியதில் அவரது இளைய மகன் சயீப் அல் அரப், மற்றும் மூன்று பேரக் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
  • நாடாளுமன்றப் பொதுக்கணக்குக் குழுத் தலைவர் முரளி மனோகர் ஜோஷியின் பதவிக்காலம் ஏப்ரல் 31 அன்று முடிவடைந்து மீண்டும் மே 1 இல் தலைவராகப் பொறுப்பேற்றுள்ளார்.
  • சர்வதேசப் பயங்கரவாதியும், அல்கொய்தா இயக்கத்தின் தலைவருமான பின்லேடன் அமெரிக்க ராணுவத்தினரால் மே 2 அன்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.
  • அருணாசலப் பிரதேச முதல் அமைச்சர் டோர்ஜி காண்டு ஏப்ரல் 30 அன்று தவாங் நகரிலிருந்து இடா நகருக்கு ஹெலிகாப்டரில் சென்றபோது புறப்பட்ட 20 நிமிடங்களில் காணாமல் போய் மே 4 அன்று அவரது சிதைந்த உடல் லோத்தால் மலைப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. இவரது மறைவையடுத்து இம்மாநில மின்சாரத்துறை அமைச்சராக இருந்த ஜர்பம் காம்லின் மே 5 அன்று அருணாச்சலப் பிரதேச முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
  • பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9 அன்று வெளியாகின. ஓசூரைச் சேர்ந்த ரேகா என்ற மாணவி 1190 மதிப்பெண்கள் எடுத்து முதல் இடத்தையும், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த வேல்முருகன் என்ற மாணவர் 1186 மதிப்பெண்கள் எடுத்து இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி சதவிகிதம் 85.9.
  • பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பினை இடைக்காலத் தடை செய்து மே 9 அன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *