இந்தக் கதை நமக்கு வந்து சில மாதங்கள் ஆயிற்று. இதை பிரசுரத்திற்குத் தேர்ந்-தெடுத்து அச்சுக்கு அனுப்பும்போதுதான், இந்து சமய அறநிலையத் துறையின் அறிவிப்பு ஒன்று வந்தது. கோயில் பூஜைகளில் கற்பூரம் பயன்படுத்த தடை என்கிறது அந்த அறிவிப்பு. காரணம் இதுதான், அதிலிருந்து வெளிப்படும் புகை உடல்நலத்திற்குக் கேடு விளைவிக்கக் கூடியது. நுரையீரல் பிரச்சினைகளை உண்டாக்குகிறது.
இதைக் கேட்டதும், கொதித்துக் கொந்தளித்து எங்கள் பழமையைக் குலைக்கிறீர்கள். பாரம்பரியத்தை அழிக்கிறீர்கள்… ஆகமத்தை மறைக்-கிறீர்கள்.. சாஸ்திர சம்பிரதாயங்களை.. புதைக்… என்றெல்லாம் தம் கட்டி வீராவேசம் பேசியிருப்பார்கள் அர்ச்சகர்களும், இந்துத்வா கும்பலும் என்று நீங்கள் கருதியிருப்பீர்-களேயானால், ஏமாந்துதான் போவீர்கள். அப்படி நடக்கவில்லை. கதையில் வரும் சதாசிவ அய்யர் போல இந்தத் தொழிலே வேண்டாம் என்று முடிவும் எடுக்கவில்லை.
பகுத்தறிவாளர்கள் சொன்னபோதெல்லாம் இல்லை என்று மறுத்தவர்கள் இப்போது, கற்பூரத்தால் உடல் நலம் பாதிக்கப்-படுவது உண்மைதான். அறநிலையத் துறையின் தடை வரவேற்கத்தக்கதுதான் என்று ஏற்றுக்கொண்டு மணியாட்டப் போய்விட்டார்கள்.
கற்பூர நாயகியே… கனகவல்லி… காளி மகமாயி… ஆஸ்மாக்காரி என்று இனி பாடுவார்களோ?