Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பாதிக்கப்பட்டவர்கள் அய்.நா.விசாரணைக் குழுவிடம் வாக்குமூலம் அளிப்பதை இலங்கை அரசு தடுக்கிறது. விசாரணையைச் சீர்குலைக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. மறைப்பதற்கு எதுவும் இல்லை என்றால் எதற்காக விசாரணைக்கு இடையூறு செய்ய வேண்டும்.

– சையத் அல் ஹுசைன், தலைவர், அய்.நா.மனித உரிமைகள் கவுன்சில்

உயர் வகுப்பினர் எல்லோருமே அந்நியர்கள். அவர்கள் ஆரிய இனத்தின் வழித்தோன்றல்கள். அவர்கள் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள். நம்மிடையே உள்ள பழங்குடியினர் மற்றும் தலித்களும்-தான் மண்ணின் மைந்தர்கள். அவர்களாகவே கல்வி, அரசியல் விழிப்புணர்வு பெற வேண்டும். அவர்கள் பிகாரில் அரசுகளை அமைப்பதற்கு முக்கியப் பங்காற்றுவார்கள்.

– ஜிதன்ராம் மாஞ்சி, முதல் அமைச்சர், பிகார்

குரல் ஓட்டு மூலம் நம்பிக்கை ஓட்டில் பா.ஜ. வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்-பட்டுள்ளதன் மூலம் ஜனநாயகத்தின் குரல்வளையை பா.ஜ. அரசு நசுக்கியுள்ளது. சட்ட-விதிகளின்படியும் ஜனநாயகத்தின் அடிப்படையிலும் ஓட்டெடுப்பு நடக்கவில்லை.

– ஏக்நாத் ஷிண்டே, எதிர்கட்சித் தலைவர், சிவசேனா

ஒருவர் மற்றொருவரின் உயிரைப் பறிக்கும் விதமாக அவரைக் கொலை செய்கிறார். அதற்கு ஈடாக அரசு அவரை மரண தண்டனை என்ற பெயரில் கொலை செய்வது  ஆபத்தானது மட்டுமல்ல; அது எந்த வகையிலும் அறிவுப்பூர்வமானது அல்ல. மரண தண்டனை என்பது அடிப்படையிலேயே தவறான கருத்தியலாகும்.

– அமர்த்தியா சென், நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர்