திருப்பதி கோவில் அண்மையில் லட்டு விளம்பரமொன்றைச் செய்தது. திருப்பதி லட்டிற்கு புவிசார் காப்பீடு பெறுவதற்காக உலகம் முழுவதிலும் உள்ள பக்தர்கள் ஆதரவினைத் தரவேண்டுமாம். அதாவது, 300 ஆண்டு பாரம்பரியமிக்க திருப்பதி லட்டு காப்பீடு பெறுவதற்கு உங்களது ஆதரவு தேவை.
100 கிலோ மைதா மற்றும் கடலை மாவு, பத்து டன் அஸ்கா(சீனி), 700 கிலோ முந்திரிப்பருப்பு, 180 கிலோ ஏலக்காய், 500 லிட்டர் பசும்நெய், 500 கிலோ கற்கண்டு, 540 கிலோ உலர் திராட்சை மற்றும் 150 லிட்டர் வாசனைப் பன்னீர் மற்றும் ரோஜாச்சாறு சேர்க்கப்படுகிறதாம். இவை அனைத்தும் ஒரு நாளில் தயார் செய்து உங்கள் கைக்கு பகவானின் பிரசாதமாக கொடுக்கிறோம் என்கிறது அந்த விளம்பரம்.
அது சரி, இவற்றுடன் கல், நட்போல்ட், பறவைக் கழிவு, இரும்புத்துரு, தலைமுடி, நகத்துண்டு இவையெல்லாம் எத்தனை கிலோ எத்தனை டன் சேர்ப்பீர்கள் என்று கூறவில்லையே! (சில நேரங்களில் வேறு சில உயிரினங்களும் வறுவலாக சேர்க்கப்-படுகிறது என்றும் சொல்கிறார்களே(?).
– சரவணா இராஜேந்திரன்