விடுதலைப்புலிகள் அமைப்பு ஒன்றும் பயங்கரவாத ஒன்றல்ல; எனவே, பயங்கரவாத அமைப்புப் பட்டியலி-லிருந்து நீக்கி அந்த அமைப்பை விடுதலை செய்ய வேண்டும் என்று அய்ரோப்பிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இதனைத் தொடர்ந்து இந்திய அரசும் முடிவை எடுக்க வேண்டும் என்ற வேண்டுகோள் தமிழ்நாட்டில் முன் வைக்கப்படுகிறது.
நம்மைப் பொறுத்தவரையில் இந்தியாவில் விடுதலைப்-புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டு இருப்பது நீக்கப்பட வேண்டும் என்ற அறிக்கையை வெளியிட்டோம் (7.10.2010) அந்த அறிக்கை வருமாறு:
இலங்கையில் உள்ள தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுப்பதே மனிதநேயம் உள்ள அனைத்து மக்களின் தலையாய கடமையாகும். இன்னமும் அங்குள்ள நம் தொப்புள்கொடி உறவுகளான தமிழர்கள், தாய்மார்கள், குழந்தைகள், முதியோர்கள் உள்பட முள்வேலிக்குள் பல முகாம்களில் சிறைப்பிடிக்கப்பட்டு இருக்கும் நிலையிலிருந்து அவர்களுக்கு விடிவு ஏற்படவில்லை.
சிங்கள ராஜபக்சே ஆட்சியின் மனித உரிமைப் பறிப்புகள் பற்றி, அய்.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன், வெளிப்படையாகவே கூறியுள்ளார். உலகப் போர் நெறிமுறைகளை மீறி தவறாக ராஜபக்சே நடந்துகொண்ட குற்றங்களுக்காக விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் என்று பலமுறை கூறியுள்ளார்.
விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்றும், விடுதலைப்புலிகள் என்றும் இலங்கை சிறையில் மனித உரிமைகளைப் புறந்தள்ளிவிட்டு, கொடுமைக்கு ஆளாகியுள்ள பல்லாயிரவர் பற்றி அய்க்கிய நாட்டு அமைப்புகளின் 60 சட்ட வல்லுநர்கள் கண்டனம் உள்பட சில நாள்களுக்குமுன் உலக ஏடுகளில் செய்தியாக வந்தது.
இந்நிலையில், அவதிப்படும் ஈழத் தமிழர்களுக்கென பல நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் இந்திய அரசு (தமிழக அரசின் உதவியும் இணைத்து) இலங்கைக்கு அனுப்பப்பட்டது. அந்நிதி உரிய முறையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்குப் பயன்பட்டதாகவோ, படுவதாகவோ தெரியவில்லை.
தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளை சிங்களக் குடியேற்றங்-களாக்கப்-படும் கொடுமை தொடர்கதையாகி வருகின்றது!
இந்நிலையில், கிடப்பது கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில் வை என்னும் பழமொழிக்கொப்ப, இல்லாத விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு இங்குள்ள தடையை மீண்டும் இந்திய அரசு நீடிப்பது, உலகத் தமிழர்களின் வேதனைக்கும், கண்டனத்திற்கும் உரியதாக்கிவிடும்!
இலங்கை அரசே இங்கே விடுதலைப்-புலிகளை முற்றாக அழித்துவிட்டோம் என்று கூறிவிட்ட நிலையில், நம் நாட்டில் மீண்டும் மீண்டும் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்குத் தடை நீடிக்கும் சடங்கு சம்பிரதாய சட்டத்தைத் தொடருவது எந்த நியாயத்தின் அடிப்படை-யிலோ என்று நமக்குப் புரியவில்லை.
காஷ்மீரிலும் சரி, மற்ற நக்சலைட்கள் பெருகிய பல வடமாநிலங்களிலும் சரி, அவர்களை மத்திய அரசும், நம் பிரதமரும் பேச்சுவார்த்தைக்கு அழைத்து, பேசி சுமுகத் தீர்வு காணும் நல்லெண்ண முயற்சிகளை மேற்-கொள்வது அறிவிப்பது நல்ல அணுகுமுறையே!
அதே அரசு, இல்லாத விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு மீண்டும் மீண்டும் தடையை நீடித்துக் கொண்டே போவது சரிதானா? ஈழ அகதிகளாகி, அகதியாக, வாழ்க்கையை தமிழ்நாட்டிலும், வேறு சில இடங்களிலும் வாழும் ஈழத் தமிழர்கள் இளைஞர்கள் மீது பொய்க் குற்றச்சாட்டின் அடிப்படையில் நிம்மதியற்ற வாழ்வினைத் (அவர்களுக்கு) தரத்தான் தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்பினை ஏற்படுத்தக்கூடும்.
எனவே, மத்திய அரசு இதுபற்றி மனிதநேய அடிப்படையில் பிரச்சினையை ஈர மனதுடன் அணுக வேண்டும். நிர்ப்பந்தப்படுத்தப்பட வேண்டிய இலங்கை அரசை நிர்ப்பந்தப்படுத்தி, ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டெடுக்க உதவிட வேண்டும் _ முன்னுரிமை அதற்குத் தான் தரப்பட வேண்டும் என்று இன்றைக்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக இந்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்தோம்.
இந்த நியாயத்தை, சட்டப்படியான நிலையை இந்திய அரசு கவனம் செலுத்தத் தவறினாலும், அய்ரோப்பிய யூனியன் நீதிமன்றம் உணர்ந்து தீர்ப்பளித்திருப்பது _- வரவேற்கத்தக்க-தாகும்.
இந்தியா மட்டுமல்ல; உலகம் முழுவதும் உள்ள மக்கள் மத்தியில் விடுதலைப்புலிகள் அமைப்பின்மீது தவறாகப் பிரச்சாரம் செய்யப்பட்டதால், அந்த அமைப்பைப்பற்றி தவறான புரிதல் இருந்திருக்குமேயானால், அதிலிருந்தும் விடுபட இத்தீர்ப்புப் பெரிதும் பயன்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகள் திடீரென்று ஒரு நாள் காலையில் ஆயுதங்களைத் தூக்கிக் கொண்டு புறப்பட்டுவிடவில்லை.
ஈழத் தமிழினமே இருக்கக் கூடாது என்று முடிவெடுத்து இனப்படுகொலையில் ஈடுபட்டது சிங்கள அரசு.
தமிழீழப் பெண்களைக் கதறக் கதறப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினார்களே சிங்கள இனக் காடையர்கள்! தமிழன் மாமிசம் கிடைக்கும் என்று விளம்பரப் பலகைகளைத் தொங்க விடவில்லையா சிங்கள வெறியர்கள்?
தந்தையின் முன் மகளையும், அண்ணன் முன் தங்கையையும், மகன் முன் தாயையும் நிர்வாணப்-படுத்தி வன்புணர்ச்சிகளில் ஈடுபட்டதைப் பார்த்த பிறகும் மானமுள்ள எந்த மனிதன்தான் ஆயுதம் தூக்காமல் அமைதியாய் -_ சோற்றாலடித்த பிண்டமாய் இருப்பான்? அதுதானே ஈழத்தில் நடந்தது!
காலங் கடந்தாலும் விடுதலைப்புலிகளின் உண்மையான போராட்டம் என்ன என்பது இப்பொழுது வெளிச்சத்துக்கு வந்து விட்டதே!
இந்த நேரத்தில் இந்திய அதிகாரிகள் வர்க்கம்பற்றி அய்ரோப்பிய யூனியன் நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து மிகவும் முக்கியமானது -_ சரியானது!
விடுதலைப்புலிகள் இலங்கை அரசுக்கு எதிரான மோதல் பிரச்சினையில் இந்திய அதிகாரிகளின் பாகுபாடான நிலைப்பாடு காரணமாக இந்தியத் தரப்பிலான தகவல்கள் நம்பத் தகுந்ததாகக் கருத முடியாது என்ற அய்ரோப்பிய யூனியன் நீதிமன்றத்தின் கருத்தும், கணிப்பும் சாதாரண-மானதல்ல!
உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் மீதான மதிப்பு எந்த வகையில் பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் என்று சொல்லத் தேவை-யில்லை.
அந்தத் தவறுகளுக்குப் பரிகாரமாக, இந்தியாவில் விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை உடனே நீக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். மேலும் ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய அரசின் அணுகு-முறையில் புதிய மாற்றம் வருமேயானால் அது மிகவும் வரவேற்கத்தக்கதாகவே இருக்கும்.
கி.வீரமணி,
ஆசிரியர்