பெயர்: புரூஸ் வில்லிஸ் (Bruce Willis)
பிறப்பு: 19 மார்ச் 1955
நாடு: மேற்கு ஜெர்மனியில் பிறந்த அமெரிக்கர்
துறை: ஹாலிவுட் திரைப்படத்துறையில் நடிகர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் 1980 இல் தொடங்கி இதுவரை 68 படங்களில் நடித்துள்ளார்; 6 படங்களில் நடித்துக் கொண்டுள்ளார்.
சிறப்பு: இவர் முதலில் தொலைக்காட்சி நடிகராக இருந்து பிறகு உலகம் அறிந்த முன்னணி நடிகராக உயர்ந்தவர்.
ஹாலிவுட்டில் பல வெற்றிப்படங்களைக் கொடுத்து அதிக வருவாய் ஈட்டும் பட வரிசையில் 6 ஆவது இடத்தில் இருக்கிறார்.
இவர் நடித்த டை ஹார்ட் (Die Hard) பட வரிசை இது வரைக்கும் 1.2 பில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது.
பெற்ற விருதுகள்: புரூஸ் வில்லிஸ், கோல்டன் குலோப் (Golden Globe), எம்மி (Emmy) உட்பட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். நாத்திக பஞ்ச்: அமைப்புரீதியான மதங்கள் தங்களுடைய இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்டன, நவீனமயமாகிவரும் மதக் கோட்பாடுகள் என்பது நவீன கற்பனையில் வளர்ந்த புராணக் கதைகளே ஆகும். ஆயினும் மக்கள் பைபிளை நம்புகின்றனர், நான் அந்த வழியில் எனது கருத்தைச் செலுத்தவில்லை.
– புருனோ