ஆசிரியர் தினத்தன்று பிரதமர் மோடியின் உரையை மாணவர்கள் கட்டாயம் கேட்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு, பள்ளிகளில் மாணவர்கள் கட்டாயமாக இருத்திவைக்கப்பட்டனர். இந்தியில் மோடி ஆற்றிய உரையிலிருந்து தப்பி, விவரமான மாணவர்கள் விளையாட்டுத் திடலுக்கும், கழிவறைகளுக்குமாக ஓடிவிட்டனர். மிச்சமிருந்த மாணவர்கள் தூங்கி வழிந்தபடி அமர்ந்திருந்தனர். தென்மாநிலங்கள் முழுவதும் இது தான் நிலைமை என்று பக்கம் பக்கமாக ஏடுகள் படம்பிடித்திருக்கின்றன. அவற்றையெல்லாம் ஒரே ஒரு காட்சியில் காட்டியது போல் இருக்கிறதல்லவா, கர்நாடகாவில் எடுக்கப்பட்ட இந்தப் படம்?
இனி, வாய்ப்பு உங்களுக்கு! சுருக்கமாக, நச்சென்று இந்தப் படத்திற்கு ஒரு கருத்து (Comment) எழுதுங்கள். சிறந்த கருத்துக்குப் பரிசு உண்டு. எங்களுக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 23.9.2014
முகவரி: நச்ன்னு ஒரு கருத்து – உண்மை
பெரியார் திடல், 84/1(50), ஈ.வெ.கி.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை – 600 007
| unmaionline@gmail.com