என்ன ஷாப்பிட்றேள்? உணவுப் பழக்கத்தில் நுழையும் மூக்குகள்

செப்டம்பர் 01-15

– சார்வாகன்

1916இல் தென்இந்தியர் நல உரிமைச் சங்கம் தொடங்கப்பட்டபோது வெளியிடப்பட்ட பார்ப்பனர் அல்லாதார் கொள்கை அறிக்கையைக் கேலி செய்தும் இது பார்ப்பனர் அல்லாதாரின் தற்கொலைக்கான நடவடிக்கை என்றும் எழுதிய ஏடுதான் உங்கள் குரல் என்று தன் குரலைப் பதிவு செய்திருக்கிறது.

அல்லாதார் கட்சியாமே என்றும் அல்லாதார் என்று ஒரு ஜாதியே இல்லையே என்றும் ஏகடியம் எழுதியவர் ஆயிரம் உண்டிங்கு ஜாதி எனில் அந்நியர் வந்து புகல் என்ன நீதி? என்று ரிட் மனு போட்டுப் பாட்டு எழுதிய சி.சு.பாரதி. இன்றைக்கு 100 ஆண்டுகள் வயதும் அதற்குத் தக்க வளர்ச்சியும் பெற்றுள்ள பார்ப்பனர் அல்லாதார் சமுதாயத்தைத் தரைமட்டமாக்கும் செயல்களில் இறங்குவது பார்ப்பனர்களுக்குப் பழகிய தொழில். பார்ப்பனர் அல்லாத மக்களைக் குறிக்க அப்பிராமண என்ற சொல்லை இவர்களது வேத, சாத்திரங்கள் பயன்படுத்துவதை வசதியாக மறைத்து விடுவார்கள்.

 

அப்பிராமணர்களின் மொழி, பழக்கவழக்கங்கள், உணவு முறை, உறவு முறை போன்ற அனைத்தையும் நொட்டை சொல் சொல்வது இவர்களது பொழுதுபோக்கு! விளையாட்டாகச் செய்வது போன்றும், சொல்வது போன்றும் எதையாவது கிண்டிக்கிளறி வினையாற்றுவதும் இவர்களுக்கு வாடிக்கை. கண்டிப்பதற்கோ, தண்டிப்பதற்கோ முயன்றால் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு ஓடுவார்கள். நாய்கள் பயத்தில் ஓடும்போது நீங்கள் கவனித்திருக்கலாம். பின்னங்கால் இடுக்கில் தன் வாலை ஒடுக்கி ஓடும். அதைப்போல ஓடும் இந்த ஜென்மாக்கள்!

சு.சாமி கதை

ஆதிதிராவிட சகோதரர்களை இழிவாகக் குறிக்கும் சொல்லைப் பயன்படுத்துவது இந்திய நாட்டில் குற்றம். தண்டிக்கத்தக்க குற்றம். அந்தச் சொல்லைப் பயன்படுத்தி விஷமத்தனம் நிறைந்த அறிக்கை ஒன்றை வெளியிட்டார் சோழவந்தான் சு.சாமி. நாடெங்கும் எதிர்ப்பு.

உடனே அந்த ஜென்மா நான் இங்கிலீஷ் அகராதியில் இருப்பதைத்தான் பயன்படுத்தினேன் என்றது. இந்தியாவில் அது ஒரு ஜாதியைக் குறிக்கும் கேவலச் சொல்; அதனைப் பயன்படுத்துவது குற்றம் என்று குரல்கள் நாடு முழுவதும் கிளம்பின.உடனே அந்த ஜென்மா காலிடுக்கில் வால் ஒடுக்கி ஓடும் நாயாக மாறிப் பின்வாங்கி, மன்னிப்புக் கேட்டுத் தப்பித்தது. இப்படித்தான் அந்த ஜென்மாக்களின் செயல்பாடு இருக்கும், எப்போதும்!

உலக மக்கள் அனைவரின் உணவுப் பழக்கமும் ஒன்றுபோல் கிடையாது. மத்திய தரைக்கடல் பகுதி உணவுபோல, தாய்லாந்து உணவு இருக்காது. தாய்லாந்து உணவில் இருந்து மாறுபட்டுத்தான் சீன உணவு இருக்கிறது. மங்கோலிய இனத்தவர்கள்தான் என்றாலும் சீன உணவு வேறு. ஜப்பான் உணவு வேறு. இவை அனைத்திலும் வித்தியாசமானது மேலை நாட்டு கான்டினென்டல் உணவு. இந்திய நாட்டில் எடுத்துக்கொண்டால் மீன், இறைச்சி உணவு ஒரு வகை.

மரக்கறி உணவு வேறோர் வகை. மரக்கறி உணவிலும் சமண (ஜெயின்) உணவு தனி. புலால் உணவில் மாட்டு இறைச்சி முகாமையான இடம் பிடிக்கும் மலையாளத்தில்! கோழி இறைச்சி முதலிடம் பிடிக்கும் பஞ்சாபில். மீன், இறால், நண்டு, கருவாடு போன்ற கடல் உணவு வகைகள் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கின்றன ஒரிசா, வங்காளம் போன்ற மாநிலங்களின் உணவில். குறிப்பாக ஒரிசா, வங்காளிப் பார்ப்பனர்கள் மத்ஸ்ய பிராமணா (மச்சப் பார்ப்பனர்கள்) எனப்படுகின்றனர்.

பாண்டா, பாண்டே, சாரங்கி எனப்படும் எந்தவகை ஒரிசாப் பார்ப்பனர்களாக இருந்தாலும் மீன் தின்பவர்கள். பானர்ஜி, முகர்ஜி, சட்டர்ஜி என்று எத்தனை வேதம் படித்த வங்கப் பார்ப்பனர்களும் மீன், இறால் இல்லாத உணவு உண்பதே இல்லை. வங்கப் பார்ப்பனர்களின வீடுகளின் தோட்டத்தில் குட்டை உண்டு. அதில் மீன் வளர்ப்பு உண்டு.  விருந்தினர் வந்துவிட்டால் வங்கப் பார்ப்பனர்கள் சமைப்பது தோட்டத்து வெண்டைக்காய் அல்ல. தோட்டத்து மீனும் இறாலும்தான். இப்படி எழுதிக் கொண்டே போகலாம்.

கடல் உணவின் சிறப்பு

உணவு வகைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ருசி, சுவை, மணம், சத்து கொண்டவை. கோளாறு செய்யாத, பக்க விளைவு இல்லாத உணவாக உலகம் முழுவதும் ஏற்கப்பட்டது கடல் உணவு. மீன், இறால், நண்டு, லாப்ஸ்டர் போன்றவை. பார்ப்பன அய்.டி. இளைஞர்களிடமும், இளைஞிகளிடமும் கேட்டுப் பாருங்கள். லாப்ஸ்டரின் ருசி என்ன என்று! ஆய்ஸ்டர் எப்படி இருக்கும் என்பதை அவர்களிடம் கேளுங்கள். எச்சில் ஒழுக விளக்கிச் சொல்வார்கள். கேட்கும்படி இந்த ஜென்மாக்களுக்கு எனது அட்வைஸ். அப்புறம் பேசட்டும் கடல் உணவு பற்றி!

பார்ப்பனர்கள் வழக்கமாகவே தங்கள் ஏடுகளில் ஆசிரியருக்குக் கடிதங்கள் என்ற பகுதியைத் தங்கள் மன அரிப்பைத் தீர்த்துக் கொள்ளப் பயன்படுத்துகிறார்கள். அந்த அரிப்பைச் சொரிந்து கொடுத்து தீர்த்துக் கொண்டதாகச் சில பேர் எழுதுவார்கள். மறுநாளே அது ஏட்டில் வந்துவிடும். தினவெடுத்தவர்கள் எழுதுவது பத்து பிரசுரமாகும். திட்டுபவர்கள் எழுதுவது ஒன்று மட்டும் பிரசுரமாகும். இதில் பத்திரிகைத் தொழில்முறைக் கமுக்கம் என்னவென்றால் வினை எழுதுவதும் எதிர்வினை எழுதுவதும் ஒருவரே! அதுவும் அந்த ஏட்டின் துணை ஆசிரியரே! இதற்கு இன்றைய எடுத்துக்காட்டு ராமசுப்பய்யரின் ஏடு! இந்த ஜென்மாக்கள் நடத்தும் எல்லா ஏடுகளுமே இந்தத் தொழிலைச் செய்கின்றன.

அப்படிப்பட்ட வகையில் எழுதி வைக்கப் பட்டதுதான் பலபேர் உண்ணும் இடங்களில் புலால் உணவு கூடாது என்பது! காய், கறி விற்கப்படும் சந்தைகளில் கருவாடு விற்கக் கூடாது என்று எழுதப்பட்டதும் அதேவகைதான். சொல்லப்படும் காரணம் என்ன? எங்களுக்குப் பிடிக்கவில்லை என்பது தானே! எங்களுக்குப் பிடித்திருக்கிறதே என்று பல்லாயிரக்கணக்கில் பல லட்சக்கணக்கில் கூறுபவர்கள் இருக்கிறார் கள். அவர்கள் எழுதுவ தில்லை. எழுதினாலும் இவர்கள் போடுவதில்லை.

அப்படியானால் இங்கு என்ன நடக்கிறது? ஜனநாயகத்தில் பெரும்பான்மை கொடிகட்டிப் பறக்கும் 51 பேர் சொல்லிவிட்டால் 49 பேர் அடிபணிந்தே ஆகவேண்டும்.

இன்றைய இந்தியாவில் 31 பேர் சொன்னதை 69 பேர் கேட்டுத் தீர வேண்டிய கஷ்டம். பா.ஜ.க. வாங்கிய ஓட்டுகள் மொத்தத்தில் 31 சதவீதம் தானே!

ஆனால் அதைவிடக் கொடுமையாக, 4 விழுக்காடு கூறுவதை 96 விழுக்காட்டினர் கேட்டாக வேண்டும் என்கிறார்கள். ஆனால் இந்த 4 விழுக்காட்டின் யோக்யதை என்ன? தினந்தினம் காட்லிவர் ஆயில் குடிக்கும் ஜென்மாக்கள், 7 சீஸ் காப்சுயூல்களை விழுங்கும் ஜென்மாக்கள், சிக்கன் எசன்ஸ் குடிக்கும் ஜென்மாக்கள் என்று பலப்பல ரகங்களும் உள்ளடக்கியவையே!

அய்யங்கார் குரல் கேட்கலாமே

நாளை இன்னொரு உங்கள் குரல் கேட்கலாம்! பூண்டு, வெங்காயம் இல்லாத சாத்தமுது மட்டும்தான் சாப்பிட வேண்டும் என்று ஒரு பிரதிவாதி பயங்கரமோ, பரகாலமோ, பரவஸ்துவோ கூக்குரல் எழுப்பலாம். (அய்யங்கார்ப் பார்ப்பனர்களின் குடும்பப் பெயர்கள் மேலே உள்ளவை! இளைஞர்களின் வசதிக்காக இவ்விளக்கம்). நாளை மறுநாள் மற்றுமொரு உங்கள் குரல் வரலாம்! காரட், பீட்ருட், தக்காளி இல்லாத சாப்பாடு மட்டும்தான் சாப்பிட வேண்டும். புஸ்குராஜ் ஜெயினோ, மல்மல்மல் ஜெயினோ, சோரடியாவோ, கரோடியாவோ கூக்குரல் போடலாம். (அவர்களது அடுக்குமாடிக் குடியிருப்புகள் இருக்கும் சாலையிலே, கோழி முட்டைகூட விற்கக் கூடாது என்கிறதுகள் இதுகள். (மோடி வருவதற்கு முன்னே அப்படி, இப்போது எப்படி என்பதை தருமமிகு சென்னைவாசிகள் தெரிவித்தால் தெரிந்துகொள்வேன்).

இந்த ஜென்மாக்கள் சைவம், அசைவம் என்கிறதுகள். வடக்கே போனால் தமிழ்நாட்டு சைவ ஓட்டலை வைஷ்ணவ் ஓட்டல் என்றுதான் எழுதி வைத்திருக்கிறார்கள். தெற்கத்திச் சைவம் வடக்கத்தி வைணவம் இரண்டுக்கும் மாற்றாக ஜெயின் உணவு வடக்கே! ஜெயின் உணவு கிடைக்கும் என்கிற பெயர்ப் பலகையைப் பரவலாகப் பார்க்கலாம்! அப்படி என்ன தனிச்சிறப்பு மரக்கறி உணவுக்கு? சொல்லுங்களேன்!

சிவன் தின்றது எது?

சைவம் என்ற வார்த்தையின் உபயதாரர் சிவன். சிவபெருமான். பரமசிவன் அல்லவா? அவன் சைவச் சாப்பாடா சாப்பிட்டான்? உங்கள் குரல் மாயாவி எழுத்தாளர்கள் சொல்லட்டுமே! கத்தரிக்காய் தனது விபூதிப்பை என்று சொன்னான் சிவன். வாழைக்காயைத் தன் நெற்றி என்று மறுதலித்தான்.

புடலங்காயைத் தன் ஜடாமுடி என்று சாப்பிட மறுத்து என்ன கேட்டான்? என்ன சமைத்தான் சிறுத்தொண்டன்? என்ன தின்றான் சிவன்? சைவம் சாப்பிட்டானா? வைணவம் சாப்பிட்டானா? கனிபலிசக் கறி (Cannibalism) தின்றானய்யா! மனிதக் கறி! அதிலும் குழந்தைக் கறி! அது உங்கள் குரல்காரருக்கு உவப்போ? சொல்லுங்களேன்!

டூனா – டின்மீன்

வங்காளத்துப் பார்ப்பனர்கள் போல வசதியில்லாதவர்கள் _ புது மீனுக்கு எங்கே போவார்கள்? புது மீனாகக் கிடைத்ததைப் பதப்படுத்திப் பத்திரப்படுத்தி வைத்துச் சாப்பிடுகிறார்கள்! இங்கே மட்டுமா? எங்கேயும்! உலகம் முழுவதுமே! பதப்படுத்தி டூனா (Tuna) மீன், சால்மன், மெக்ரேல் போன்ற ஒமேகா 3 நிறைய உள்ளவை டின்களில் அடைத்து விற்கப்படுகின்றன. பயணத்தின்போதும் சாப்பிடுகிறோம். வீட்டில் இருக்கும்போதும் உண்கிறோம்! இதுவும் அதுதானே! அதையும் தடுப்பீர்களா? இது டப்பாக்களில் இருக்கிறது. கருவாடு காற்றுப் புகாத பிளாஸ்டிக் பைகளில் இருக்கிறது.

இரண்டின் வாசமும் இந்த ஜென்மாக்களின் மூக்கில் நுழையாதே! பின் ஏன் வெறுப்பு? இன்னும் சொல்வோம், இதே ஜென்மாக்கள் அய்.டி. உத்தியோகத்தில் சம்மணம் போட்டு உட்கார்ந்து டின்னில் அடைத்த மேற்படி ருசியான பண்டத்தை ஒரு கை பார்க்கிறதுகளே! மடிசார்கள் வேண்டுமானால் ஒதுக்கலாம். மிடியும், ஜீன்சும், பெர்முடாவும், ஷார்ட்ஸும் வெட்டுகின்றதுகளே! அமெரிக்காவுக்கு ஒரு நீதி! கோயம்பேட்டுக்கும் ராயபுரம் கல்மண்டபம், தங்கசாலைக்கும் வேறு நீதியா? என்னய்யா உங்க மனுநீதி? சூத்திரன் கொன்றால் தூக்கு! பார்ப்பான் கொன்றால் மயிர் மழித்தல்! மனுநீதி இன்னுமா செல்லும்? கடையைக் கட்டுங்கள் பார்ப்பன ஜென்மாக்களே!

உங்கள் குரல் மீது குற்றம் சொல்வதைவிட மார்க்கெட் சீப் நிர்வாக அதிகாரிதான் குறை காணப்பட வேண்டியவர்! லைசென்ஸ் விதிகளுக்கு மாறுபாடு என்றால் பலசரக்கு சாமான்களை ஏன் ஒன்றும் செய்யவில்லை? காய்ந்த மிளகாய் விற்பதும் உரிம விதிப்படி தவறு என்று கூறுபவர் ஏன் அதைப் பறிக்கவில்லை? ஏன் காய்ந்த மீனை மட்டும் பறித்துக்கொண்டு போனார்? இந்தக் கேள்விக்கு என்ன பதில்?

விதிமுறைகள் கோளாறா? அதைக் கையாள்பவர்களின் கோளாறா?

எது நாறுகிறது?

உப்புக்கண்டம் (கருவாடு) பறிகொடுத்த பார்ப்பனத்தியைப் போல என்றொரு பழமொழி இருக்கிறதே! அது சொல்வ தென்ன? உங்களவா அதை ஷாப்பிட்ருக்கா என்பதுதானே!

காய்ந்த மீன் நாறுகிறது என்றால்… இந்தக் கேள்வி எழுவதும் நியாயமாகிறதே! போனவாரக் காய்கறிகளின் நாற்றத்தை விடவா கருவாடு நாற்றம் அதிகம்? மணக்கும் பூவாசனை இரண்டு நாள் கழித்து வயிற்றைக் குமட்டி வாந்தி வரவழைக்கும் வாசனையாகி விட்டதை அனுபவித்திருக்கிறீர்களா? பூமாலை கட்டும் கடைகளின் பக்கம் போங்கள். திருவரங்கத்தில் சாத்தாணித் தெருப்பக்கம் நடந்து பாருங்கள்! மின்ட் மார்க்கெட் தேவலை என்பீர்கள்!

இந்த ஜென்மாக்களுக்கு மீன் கூடாது! மீனவப் பெண் மட்டும் வேண்டுமோ? பராசரப் பார்ப்பான் மச்சகந்தியைக் குறித்த நேரத்தில் புணரவேண்டும் என்பதற்காக வயதுக்கு வராத சிறுமியை வயதுக்கு வரச்செய்து, கூடிக் குழந்தையைப் பெற்றானே! மீன் நாறுகிறது என்னும் ஜென்மாக்களே! மீனவப் பெண்ணும் நாறினாளாமே! மச்சகந்தி மீது அடித்த கவிச்சி நாற்றத்தைச் சகித்துக் கொண்டதால்தானே, வியாசன் பிறந்தான்? பாரதம் பாடினான்? அதற்கு மட்டும் கவிச்சி, பரவாயில்லை! கருவாடு நாற்றம் சகிக்க முடியவில்லை என்றால் என்னங்க இரட்டை நீதி?

எல்லா ஜீவராசிகளையும் ஆண்டவன் படைத்தான் என்கிறீர்களே! மீனையும் அவன்தானே படைத்தான்? படைத்ததோடு நிற்காமல் அவனே மீனாக அவதாரம் எடுத்தான் என்கிறீர்களே! அந்த மீனை ஏனய்யா உண்ணக் கூடாது என்கிறீர்கள்? நாறுகிறது என்றால், படைத்தவன் உங்கள் நாராயணன்தானே! தண்ணீரின்மேலே அவன் தூங்குகிறான்! தண்ணீருக்கு அடியில் அது வாழ்கிறது! இரண்டும் ஒன்றுதானே! அந்த மீனைத் திருடியும் தின்கிற கருடனை ஆழ்வாராக்கி வியாழக்கிழமை தோறும் செருப்பைக் கழற்றிவிட்டு நின்று மேலே பார்த்துக் கும்பிடும்போது, அதே மீனைத் தின்பவர்களை ஏனய்யா கரித்துக் கொட்டுகிறீர்கள்? அதைப் பிடித்து விற்று வாழ்பவர்களின் வயிற்றில் அடிக்கிறீர்கள்?

தேசிய வேஸ்ட்

உலகின் மொத்தக் கடல் உணவு விதைக்காமல், உரம் இடாமல், நீர் பாய்ச்சாமல் விளைந்து இருப்பது. பிடிக்கப் பிடிக்க உற்பத்தி! தின்னத் தின்ன உற்பத்தி! ஆனால் அதை உண்ணப் பயன்படுத்தும் இந்தியர்கள் மிகக் குறைந்த அளவு மட்டுமே! அதை அறுவடை செய்து வருமானம் பார்ப்பவர்கள் இந்தியாவில் மிகமிகக் குறைவு. இந்த ஏழைகளின் நாட்டில் இயற்கை வளத்தைப் பயன்படுத்தி வாழ்வதை, வளர்வதைத் தடுக்கும் வகையில் தத்துவம் பேசுபவர்களை என்ன செய்வது? தேச நன்மைக்கு எதிரானவர்கள் எனலாமா? தேசப் பாதுகாப்புச் சட்டம் இருப்பதைப் போல் அதற்கு இடையூறு செய்வதைப் போல _ தேச வளப் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வந்து தண்டிக்க வேண்டாமா?

பரதவரும் பார்ப்பனரும்

நெய்தல் நில மக்களில் ஆண்களில் கடலோடிகளாக இருப்பவர்கள்  எல்லாருமே! அவர்கள் மீன் பிடிக்க கடலுக்குப் போகும்போது, அவர்களின் மனைவியர் கருவாடும் உப்பும் விற்று நெல், அரிசி, பருப்பு வாங்கிப் பண்டமாற்று முறையில் குடும்பத்தை நடத்திய பாங்கினை இரண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட சங்க இலக்கியங்கள் பாடுகின்றன. களவியலும் கற்பியலும் எவ்வித மோதலும் இல்லாமல் சிறந்து விளங்கிய சிறப்பைப் பாடுகின்றன. ஆனால்,

மேட்டுக் குடியினரின், மருத நிலத்து மக்களின் வாழ்வைப் பாடிய அதே இலக்கியங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர், குழந்தை பெற்றுக் கொடுக்க இன்னொரு மனைவி, இவர்கள் போதாது என்று காமக் கிழத்திகள், (வைப்பாட்டிகள், பரத்தையர்) என்று வாழ்ந்த அவலத்தையும் பாடுகின்றன.

ஆய்வாளர்களின் கருத்துப்படி தமிழ் மண்ணில், இரண்டாயிரம் ஆண்டுகளாக பண்டை இயல்பு மாறாமல் இருப்போர் இரண்டு ஜாதியினர்தாம். ஒருவர் மீனவர். மற்றவர் பார்ப்பனர். இப்படி இருக்கையில் மீனவரைப் பாதிக்கும் செயல்களில் பார்ப்பனர் ஈடுபடுவது அவர்கள் பாஷைப்படியே, பாபம் அல்லவா? ஏன் அவர்கள் இத்தகையப் புன்மைச் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்?

இந்த ஜென்மாக்கள் சைவம், அசைவம் என்று பேசித் தமிழைக் கெடுப்பதைப் போலவே, நான்வெஜ் என்று பேசி, எழுதி இங்கிலீஷையும் கெடுக்கிறதுகள். எந்த அகராதியிலும் இந்தச் சொல் இல்லை. Hindlish  என்ற வகையில்கூடக் காணோம். Non என்ற லத்தீன் சொல்லை இவர்களாகவே முன்னால் செருகிக் கொண்டு வெஜ்ஜுக்கு எதிர்ச் சொல் என்று ஆக்கிக் கொண்டு விட்டார்கள். இயற்கையில், புலால் உணவு உண்பவன்தான் மனிதன். அதிலிருந்து மாறுபட்டு மரக்கறி மட்டும் விரும்பும் பிரகிருதிகளுக்காகத்தான் வெஜிடேரியன் என்ற சொல். நம்மூரில் 4 சதவீதம் இருந்து கொண்டு 96 சதவீதத்தை நான் போட்டுக் குறிப்பிடுகிறார்கள். எல்லாவற்றையும் கெடுத்ததைப் போல, இங்கிலீஷையும் கெடுத்து விட்டார்கள். இங்கிலீஷில் நாளேடு நடத்தினவர்கள் இப்போது தமிழிலும் நுழைந்து கெடுக்கத் தொடங்கி விட்டார்கள். தமிழால் இணைவோம் என்கிறார்கள். இணையும் யோக்யதை இதுவா?

மீன்களைப் பிடித்தலும் உண்பதும், விற்பதும், மீந்தவற்றை உணக்கலும் (காய வைத்தல்) நெய்தல் நில மக்களின் தொழில் என்பதை நற்றிணைப் பாடல் 63 பாடுகிறது. மீன் உணவின் பெருமையை அகநானூறு பாடல் 110 கூறும்போது கருவாடு பொறித்ததையும் பாடுகிறது. அம்மக்கள் வாழும் ஊர் முனிவுஇல் நல்ல ஊர் எனவும் கூறுகிறது.

வெறுத்தல் என்பதே என்ன என்று தெரியாத மக்களின் ஊராம். அத்தகைய ஊரில் குடியேறிய பார்ப்பன மாந்தர்கள் வெறுப்பையே கக்கி வாழ்கின்றனர்.

என்ன கொடுமை? பரதவர்களின் வாழ்முறைபற்றிச் சங்க காலத்திலேயே சிறப்பாகப் பாடப் பெற்றிருப்பதை குறுந்தொகை (பாடல் 320 மற்றும் பாடல் 269) குறிப்பிட்டுக் கூறுகிறது.

குள்ளமனம் கொண்ட குறுமதியினர் கூட்டம் குக்கலெனக் குரைக்கிறது. அலட்சியப் படுத்துவோம், அனைத்துத் துறையிலும்!

அய்யங்கார் ஏட்டு கான்டீனில் புகுத்தியதே அக்கிரமம்! அத்தோடு நிறுத்தாமல் கோயம்பேடுக்குள்ளும் நுழைவதைச் சகித்துக் கொள்ளக்கூடாது!

ஆரியர் சேர்க்கை தமிழுக்கும் தமிழர்க்கும் ஆகாது என்றார் மறைமலை அடிகள்.

நினைவில் கொள்வோம்! செயலில் காட்டுவோம்!


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *