உண்மை ஆகஸ்ட் 1-15 இதழில் வெளிவந்த செத்த மொழிக்குச் சிங்காரம் _ ஏன் என்ற கட்டுரை காலத்திற்கேற்ற கருத்துக் கருவூலம். சமஸ்கிருதம் பற்றிய பார்ப்பனர்களின் கருத்துகளை எடுத்துக்காட்டி அறிவு ஆசான் தந்தை பெரியாரின் கணிப்பினை எடுத்துக்காட்டியுள்ள விதம் அருமை! அணைகளின் இன்றியமையாமையை உணர்த்தும்விதத்தில் கல்லணையும் கற்கோவிலும் அமைந்திருந்தது.
– எம்.ஏ.தயாளன், திருச்சி
சதாம் வில்லனான விதத்தினை எரியும் எண்ணெய் பூமி என்ற தொடரின் மூலம் அறிந்துகொள்ள முடிந்தது. ஆம்பிளைக்கு உண்டா இந்த அட்வைஸ் ஆண் இனத்திற்கான சாட்டையடி மட்டுமல்லாது பெண் இனத்தையும் சிந்திக்க வைத்த விதம் பாராட்டிற்குரியது. புதுமை இலக்கியப் பூங்கா பகுதியில் இடம்பெற்றிருந்த டி.கே.சீனிவாசனின் பக்தி சிறுகதை கோவிலின்மீது அதீத அக்கறை காட்டும் பெரிய மனிதர்களின் உள்நோக்கத்தைப் புரிந்துகொள்ள உதவியது.
– நா.செந்தாமரை, இராஜபாளையம்