Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்,

உண்மை மாத இதழ் பலமுறை படித்திருக்கிறேன். கடிதத் தொடர்பு இதுவே முதல்முறை. எனது பெயர் கா.சிவஞானம், தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் (வட்டம்) வேப்பத்தூர் பகுதியைச் சார்ந்தவன். தற்போது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் M.Phil., வரலாறு பயின்று வருகிறேன்.  நான் தந்தை பெரியாருடைய கருத்தியலை உள்வாங்கி இருக்கிறேன். நான் சோர்ந்து வீழ்ந்தபோதெல்லாம் எனைத் தூக்கி நிமிர்த்தியது அய்யாவின் கருத்துரைகள் அடங்கிய புத்தகமும், உண்மை மாத இதழ் சிந்தனைத் துளிகளும் என் வாழ்வை வளமிக்கதாக்க உதவுகிறது. நான் பல புத்தகங்களும் செய்தி நாளேடுகளும் இதழ்களும் படித்திருக்கிறேன்.  உண்மை இதழ் போல செய்திகள் வேறு எந்த இதழ்களிலும்  கண்டதில்லை. உண்மை இதழ் செய்திகளை உண்மையாகவே தருகிறது.  ஒவ்வொரு பக்கமும் வித்தியாசங்கள், ஆச்சரியங்கள்.  புதுப்பாக்கள் வியக்க வைக்கின்றன.

கா.சிவஞானம் வேப்பத்தூர் அஞ்சல், தஞ்சாவூர்


அன்புள்ள உண்மை ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.

உண்மை இதழில் கலைஞர் சொற்போர் பற்றி படித்தேன்.  1943 லும் ஆரியர் சூழ்ச்சித்திரையை அவரது சொற்போர் விலக்கிற்று.  இன்று 2011லும் அதே சூழ்ச்சிக்கு எதிர்க்கணை தொடுத்து சொற்போர் நிகழ்த்துவது இன்றைய கண்கூடான காட்சி.

திருவாரூர் பள்ளியில் கலைஞர் படித்தபோது அவருக்கு சொற்போரில் எதிராக ஒரு வைத்தியநாதன் இருந்துள்ளான். இன்றும் அவருக்கு எதிர்ப்புக் கணை தொடுக்கிற வைத்தியநாதனை தினமணி ஆசிரியராய்ப் பார்க்கிறோம்.

ஜெ யை ஆட்சிப்பீடத்தில் அமர்த்த பிராமணர் சங்கம் சங்கராச்சாரியாரைக் கைது செய்து சிறையிலடைத்ததையும் பெரிதுபடுத்தாமல் தீர்மானமே போடுகிறது!.  அதைப் பார்த்த பிறகாவது இந்தச் சூத்திரத் தமிழனுக்கு கலைஞரை ஆதரிக்க வேண்டுமென்ற உணர்வு, சுரணை வரவேண்டாமா?

பாவலர் அறிவரசன், திருலோக்கி


வணக்கம். உங்கள் இதழைக் கண்டேன்.  அறிவினை ஆக்கும் இதழ். அதில் அரிஸ்டாட்டில், பிளேட்டோ, சாக்ரட்டீஸ் அய்ன்ஸ்டின், போன்றோர் கருத்துகளையும் அடிக்கோடிட்டு எழுதினால் நன்று.  சான்றாக அய்ன்ஸ்டின் “Religion is a Product of human weakness” – என்பன போன்று பலவற்றைக் குறிப்பிடுகிறார். அரிஸ்டாட்டில் லிஹ்நீவீனீ என்னும்  பெயருடைய அமைப்பினை அமைத்து அக்கால மக்களுக்கு அறிவுச்சுடர் ஏற்றினார். நீங்களும் அறிவுச்சுடர் ஏற்றுங்கள்.

கி. ராமச்சந்திரன்
கல்லூரிப் பேராசிரியர் (ஓய்வு)
இலக்குமிபுரம் கல்லூரி – நெய்யூர்
குமரி மாவட்டம்