ஜப்பானின் வடகிழக்குக் கடலோரப் பகுதியான மியாகி பகுதியில் 7.4 என்ற அளவில் ஏப்ரல் 7, ஏப்ரல் 11(7.1), ஏப் 14 (6.1) இல் பூகம்பம் பதிவாகியுள்ளது.
அசாமில் 2 ஆவது மற்றும் கடைசிக் கட்ட சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 11 இல் நடைபெற்றது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, ரூ 2 கோடி பரிசுப் பொருள்கள் பெற்றதற்காகத் தொடரப்பட்ட வழக்கிலிருந்து விடுவிக்க முடியாது என மனுவைத் தள்ளுபடி செய்து சி.பி. அய் நீதிமன்றம் ஏப்ரல் 12 இல் ஆணையிட்டுள்ளது.
ஆப்ரிக்க நாடான அய்வரி கோஸ்ட்டின் மேனாள் அதிபர் லாரென் பாகுபோ ஏப்ரல் 12 இல் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
தமிழகம், புதுச்சேரி, கேரள சட்டசபைத் தேர்தல்களுக்கான ஓட்டுப் பதிவுகள் ஏப்ரல் 13 இல் நடைபெற்றுள்ளன.தமிழகத்தில் 78 சதவீத வாக்குகள் பதிவாயின.
சேரன்மாதேவி தொகுதியில் (2006) காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வேல்துரை வெற்றிபெற்றது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 13 இல் தீர்ப்பளித்துள்ளது..
எகிப்தின் மேனாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் மற்றும் அவரது இரு மகன்களும் எகிப்து ராணுவ அரசால் ஏப்ரல் 13 இல் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் கராச்சி சிறையில் அடைக்கப்பட்டிருந்த 89 இந்தியக் கைதிகள் பாகிஸ்தான் எல்லையான வாகாவில் உள்ள இந்திய அதிகாரிகளிடம் ஏப்ரல் 15 இல் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
நக்சலைட் மற்றும் மாவோயிஸ்டு தீவிரவாதிகளுடன் தொடர்பு வைத்திருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட டாக்டர் பினாயக் சென்னுக்கு ஏப்ரல் 15 இல் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. ஊழலுக்கு எதிரான லோக்பால் மசோதா தொடர்பான வரைவுக் கூட்டுக்குழுவின் முதல் கூட்டம் டில்லியில் ஏப்ரல் 16 இல் நடைபெற்றுள்ளது.
எகிப்து முன்னாள் அதிபர் முபாரக்கின் தேசிய ஜனநாயக கட்சி கலைக்கப்பட்டு, அக்கட்சியின் சொத்துகள் அனைத்தும் அரசுக்குச் சேர வேண்டும் என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 16 இல் ஆணையிட்டுள்ளது.
ஏமன் அதிபர் அலி அப்துல்லா சலே பதவி விலகுவது குறித்த பேச்சுவார்த்தை ஏப்ரல் 18 இல் தோல்வியில் முடிந்துள்ளது.
அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் நாவரசுவைக் கொலை செய்த வழக்கில் ஜான் டேவிட்டுக்கு இரட்டை ஆயுள் தண்டனையை உறுதி செய்து உச்ச நீதிமன்றம் ஏப்ரல் 20 இல் தீர்ப்பளித்தது. ஜான் டேவிட் கடலூர் மத்திய சிறையில் ஏப்ரல் 23இல் சரணடைந்தார்.
இந்திய விண்வெளி ஆய்வு மய்யமான இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி. 16 ராக்கெட் ஏப்ரல் 20 இல் வெற்றிகரமாக ஏவப்பட்டது.