Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

புதுப்பாக்கள் :

பன்றி அவதாரம் எடுத்த கடவுள்…

பைரவர் வாகனம் நாய்
மாடு புனிதம்
மிருகங்களிடம்
கருணை காட்டும் இந்து மதம்
தாழ்த்தப்பட்டவரை மனிதனாக அல்ல
மிருகமாகக்கூட மதித்ததில்லை
பன்றி அவதாரம் எடுத்த கடவுள்
தலித் அவதாரம் எடுத்ததே இல்லை.
ஆனாலும் மகாத்மா
கூச்சமில்லாமல் சொன்னார்
தாழ்த்தப்பட்ட மக்களே
கடவுளின் குழந்தைகள்
ஹரிஜன்

– வே.மதிமாறன்

 


 

உறுதியான கேள்வி!

இல்லையென்ற பதில்
அளவுக்கதிகமாய்
உறுதியாய்
சொன்ன பிறகுதான்.

ஏன்? என்ற கேள்வியும்
அளவுக்கதிகமாய்
உறுதியாய்
கேட்கத் தோன்றியது!

***
முரண்
கோவிலுக்குள்
புகைப்படம் எடுத்தால்
ஆகம விரோதம்

கண்காணிப்புக் கேமரா வைத்து
படமெடுத்தால்
ஆகாதோ விரோதம்!

– கற்பனைப்பித்தன், பெரம்பலூர்.