Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

பாத்திரமறிந்து சாமியாடு

கவிதை :

பாத்திரமறிந்து சாமியாடு

நாராயணசாமிக்கு
சாமியாடும்
அன்னப்பொட்டு அக்கா

முத்தாரம்மனுக்கு
சாமியாடும்
எக்கிமாடன்.

தீப்பந்தம்பிடித்து
வேப்பமர சாமிக்கு
சாமியாடும்
குருசாமி

கிடா ஆட்டு இரத்தம்
குடிக்க
சாமியாடும்
காந்தாரி

திருவிழா
பாத்திரமறிந்து
சாமியாடும்
சாமிகள்

– கு.ப.விசுணுகுமாரன்