கழிவுகளைக் கையால் அள்ளும் தொழிலுக்கு முழுமையாகத் தடை கொண்டுவர வேண்டுமானால் முதலில் ஜாதியற்ற சமூகம் உருவாக்கப்பட வேண்டும். ஜாதிப் பாகுபாடே இந்தத் தொழில் தொடர்வதற்குக் காரணமாகக் கருதப்படுகிறது.
இதைத் தடுத்து நிறுத்த வேண்டுமானால் சட்டமேதை அம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு என்ற நூலும் தந்தை பெரியாரின் பெண் ஏன் அடிமையானாள் என்ற நூலும் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும். மேலும் பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியார் கல்வித்துறை, புத்தர் கல்வித்துறை என்ற 2 புதிய துறைகள் உருவாக்கப்பட வேண்டும்.
– ரவீந்திரன்,
இதழியல் துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம்