பெண்ணைக் கேவலப் படுத்தும் கற்பழிப்பு என்ற சொல்லிற்கு மாற்றுச் சொற்களாக பாலியல் பலாத்காரம், வன்புணர்ச்சி போன்ற சொற்கள் வழக்கத்தில் இருந்தும் அவற்றைப் பயன்படுத்த தமிழ் தினசரிகள் சில பிடிவாதமாக மறுக்கின்றன.
குறிப்பாக தினமலரும், தினத்தந்தியும் கற்பழிப்பு என்ற சொல்லைத் தங்களின் மார்க்கெட் உத்தியாகக் கருதி தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றன. கற்புக்கு இலக்கணமும், விஞ்ஞான விளக்கமும் வந்துவிட்ட பிறகும் இவற்றைப் பிடித்துத் தொங்குவது, பாலியல் வன்முறைக்கு ஒப்பானதாகும். இப்படிக் குறிப்பிட்டே இவை வார்த்தைகளால் பெண்களைப் பலாத்காரம் செய்கின்றன. தினசரிகள் இவற்றை மாற்றிக் கொள்வது நல்லது….
– எச்.பீர் முஹம்மது, முகநூலிலிருந்து…