பல்லக்குச் சுமந்தோனுக்குத் தோளில் காய்ப்பு, பல்லக்கில் பயணித்தோனுக்குத் தேங்காய் மூளிகள்! இப்படியாகச் சேர்ந்த சில்லரையில் பெண்டு பிள்ளைகளுக்குச் சிறந்த கல்வி _ தொழிற்படிப்பு! அரசுப்பணி மற்றும் ஆரவாரத் திருமணங்கள்!
தேங்காய் மூளிகள் எண்ணெய்க் குடங்கள் தாராள விற்பனையில்!
பல்லக்குச் சுமந்தவனோ பிள்ளைகளை அனுப்புவித்தான் மாடு மேய்க்க பொறுப்புடைய ஒரு தந்தையாக!
அவளும் – தீட்டுப்படாதவாறு பாலை எடுத்துக் கொண்டாள் தொலைவில் நின்றவளாய்
– கோ. கலைவேந்தர்
மனிதர்களின் பரிணாமம்!
திசைகள் உருவானது, நான் ஓர் திசையில் சுணங்கிப் போனேன்; எனக்கென ஒரு கடவுள் உருவானபோது நான் திசையறியாமல் இணங்கிப் போனேன்; என்னைப் புறக்கணித்து பிறிதொரு கடவுளும் மதமும் தோன்றுகையில் – நான் எல்லாத் திசைகளிலும் கலங்கிப் போனேன்; கழிந்த காலங்களில் மதம் சிதறிய ஜாதிகளால் நான் இன்று இன்னும் சுருங்கிப்போனேன்; இத்தனைக்கும் பிறகு என்னை நானே மகான் என்றும் கடவுள் என்றும் சொல்லிக்கொள்வேன்…. மனிதனென்றும் கூசாமல்…..
Leave a Reply