Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

கவிதை : ” உண்மை” பேசும்! உண்மை இதழ்!

ஒளியினும் வேகம்

மின்னலாய்ப் பாய்ச்சல்

பொய்மை ஊமையாக

‘உண்மை’ பேசும்.

ஈரோட்டுப் பெரியாரின்

கடவுள் மறுப்பு

சமூகநீதி

சமத்துவப் பாதை

கருஞ்சட்டை வீரர்தம்

களப்பணி போற்றி

‘உண்மை’ பேசும்

வந்தேறிப் பெண்டிர்

சிவப்புத் தோலில்

சிந்தை மயங்கி

மன்னர்கள் ஆட்டம்

செந்தமிழில்

வடமொழி கலப்பு.

ஆரியன் ஆசைக்கு

கோயிலைக் கட்டி

கட்டியதில் அவனையே

வேலைக்கு அமர்த்தி

ஊரையே இனாமாக

எழுதியும் கொடுத்து

வரிவசூல் செய்யும்

உரிமையும் அளித்து

ஆரியன் உயர

பூர்வக்குடி தவிக்க

மன்னர்கள் செய்த

மாபெரும் குற்றத்தை

‘உண்மை’ பேசும்.

மூடநம்பிக்கை ஒழிய

மறுமலர்ச்சி உதிக்க

சூத்திரர் பஞ்சமர்

விடுதலை காண

ஆணும் பெண்ணும்

சரி நிகராக

கருப்புச் சட்டையால்

காவியை எரித்த

வெண்தாடி வேந்தரின்

‘உண்மை’ பேசும்.

குடியுரிமை திருத்தி

நாட்டையே பிளக்கும்

மதவெறி மடிய

மனிதநேயம் மலர…

‘உண்மை’ பேசும்.

நீதிநூல் ‘இருக்கை’யில்

‘பூணூல்’ அமர்வு

மனுநீதி பேசி

சமநீதி மறுக்கும்

நீதிமன்றங்களின்

முகத்திரை கிழித்து

‘உண்மை’ பேசும்.

உண்மையை விழுங்கும்

பொய்யும் புரட்டும்

குடியும் கூத்தும்

கள்ள உறவும்

மலிந்து கிடக்கும்

‘இராமாயணம்’ ‘மகாபாரதம்’

வீரத்தை நட்பை

வஞ்சக சூட்சியால்

வீழ்த்திய “கீதை”யின்

தோலை உரித்து

‘உண்மை’ பேசும்.

“ஆரியம் அகல

முதல்குடி தமிழ்குடி

அரியணை ஏற

கருப்பு மையில்

சிவப்பு எழுத்துகளால்

“உண்மை’ இதழ்!

உண்மை பேசும்

உரக்கப் பேசும்.

– சா.கிள்ளிவளவன்,

சுண்ணாம்புகொளத்தூர்,

 சென்னை-129