மகாராட்டிராவில் மாட்டிறைச்சிக்குத் தடை விதித்தது குறித்து கருத்துக்கூறிய மத்திய உள்துறை இணையமைச்சர் கிரண் ரிஜிஜு, மக்களின் உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும். இந்தியா போன்ற மதச்சார்பற்ற நாடுகளில் உணவுப் பழக்க வழக்கங்களுக்குக் கட்டுப்பாடோ தடையோ விதிக்கக் கூடாது என்றார்.
மாட்டிறைச்சியை உண்ண விரும்பக் கூடியவர்கள் பாகிஸ்தானுக்குச் சென்றுவிட வேண்டும் என்று அடாவடியான, ஆதிக்கப் போக்கிலான கருத்தைச் சொன்னவர் முக்தார் அப்பாஸ் நக்வி. இக்கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நான் மாட்டிறைச்சியை உண்பவன் என்னைத் தடுக்க யாராலும் முடியாது என்று காட்டமாய் பதில் கூறி கண்டனம் தெரிவித்தவர்தான் கிரண் ரிஜிஜு அவர்கள்.
மதச்சார்பற்ற நாட்டில் மத நல்லிணக்கத்தின் மீதும் கவனம் செலுத்த வேண்டும் என்றார் ரிஜிஜு.
– தினமணி, 28.05.2015