ஆன்றோனே…
சான்றோனே…
அசுரர்குல தலைவனே….
திராவிட இன வேங்கையே…
ஆரியப் பேயை
விரட்டியடித்து
சாதிப் பிணி
தீர்த்தவனே….
தென்னகத் தந்தையே
நாளொன்று போதாது அய்யா
உந்தன் புகழ் சொல்ல…
பார்ப்பன நரிகளின்
வாலை ஒட்ட நறுக்கிட்டாய்…
திராவிட இனம் வளர
நீயே வித்திட்டாய்…
பெண் விடுதலைக்கு
அடித்தளமிட்டாய்…
பிள்ளையாரைப் போட்டு
உடைத்திட்டாய்…
மூட நம்பிக்கையினை முற்றிலுமாய் ஒழித்திட்டாய்…
நீதிக்கட்சி வளர்த்திட்டாய்
இந்தி திணிப்பை அழித்திட்டாய்…
தள்ளாத வயதிலும்
தலை நிமிர்த்திட்டாய்…
வளரும் சமுதாயத்தின்
தலைசிறந்த எடுத்துக்காட்டாய்…
சிக்கனமே உருவாய் வாழ்ந்து சிறந்த புகழ் அடைந்திட்டாய்….
விமர்சனங்களை வரவேற்ற
வீர வேங்கையே…
சளைக்காது பாடுபட்டாய்
உம் 95 வயதிலும்….
உம்முடைய 134 ஆம் ஆண்டு
பிறந்தநாள் விழாவில்
நீர் எங்களோடு இல்லாவிடினும்
உம்மைப் படித்த நாள்முதற்கொண்டு
எங்களோடே இருப்பது
போன்றதோர் உணர்வு … இருந்தாலும் சின்ன
மனவருத்தம்தான்…
உம் காலகட்டத்தில்
இல்லாமல் போய்விட்டோமே என்று…
குளமாகிவிட்ட கண்களின்
கண்ணீர்த்துளிகளும்
கண்ணீர்வடிக்கும்
நீர்பட்ட நோயின் வேதனையை தாங்கமாட்டாமல்…
இரும்பு இதயமே….
நீதி அரசனே…
உம் வித்துக்கள் நாங்கள்…
அயராது உழைத்திடுவோம்
எத்தனை தூண்கள்
எதிர்த்த போதிலும்
கோபுரமாய் உயர்ந்து
நின்றவர் நீரே….
வாழ்ந்து கொண்டிருக்கிறீர் அய்யா
எங்களின் இதய சிம்மாசனத்தில்
முடிசூடா மன்னனாக…
வணங்கி மகிழ்கிறோம்..
வீர வணக்கம்…
– தீபா வெண்ணிலா-