சமூக நீதிப் பொரில் ஆசிரியரின் ‘விடுதலை”

ஆகஸ்ட் 01-15

வகுப்புரிமை  பல்லாயிரம் ஆண்டு சமுதாய நோய்க்குக் கிடைத்திட்ட மூலிகை! இந்தியப் பரப்பின் எல்லாப்பகுதிகளிலும்  அம்மூலிகைப் பயிர் விளைச்சலுக்கு வித்துக் கொடுத்த இயக்கம் தந்தை பெரியார் இயக்கம் என்பார் கவிஞர் கலி பூங்குன்றன்.

அந்த இயக்கத்தின் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் வாரிசாக வந்துதித்த தமிழர் தலைவர் _ விடுதலை ஆசிரியர் சமூகநீதிப்போரில் தம் பகைவாள் விடுதலையை எம்.ஜி. ஆர் அரசுக்கு எதிராக  உயர்த்திப் பிடிக்க வேண்டிய வேலை 1979ல் ஏற்பட்டது.  வீரத்தின் திரு உரு வீரமணி முடங்கிப் போய்விட வில்லை. முன்னணி வீரராக விடுதலையைக் கையில் பிடித்து முன்னேறினார்.
அந்த வரலாற்றுப்பக்கங்கள் நம் கண் முன்னே விரிகின்றன.

1977- ஆம் முதன் முதலாக ஆட்சியை கைப்பற்றிய அ.தி.மு.க, 1979லேயே முன்பின் யோசனை இல்லாமல் தமிழினத்தின் தலைவிதியை நிருணயிக்கக்கூடிய சமூகநீதிக் கொள்கையில் கை வைத்தது. அந்த திருத்தம் இதுதான்.

உயர் கல்விக்கூடங்களிலும் அரசாங்கப் பதவிக்கு அரசாங்கப்பதவிக்கு பிறபடுத்தப்பட்ட வகுப்பினருக்கு 31 விழுக்காடும், தாழ்த்தப்பட்டவர்களுக்கு 18 விழுக்காடும் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பல்லாண்டுகளாக நடைமுறையில் இருந்து வந்த கொள்கை 1952ல் இருந்து 1954 வரையில் ஆட்சி புரிந்து வந்த பார்ப்பனர், இராஜாஜிகூட இக்கொள்கையில் கை வைத்து எந்த மாற்றமும் செய்யவில்லை.அப்படியிருக்க ஆட்சியில் ஏறியதும் எம்.ஜி.ஆர் அவசர கோலத்தை அள்ளி வீசியதுபோல இந்தக் கொள்கையில் திடுமென தடுமாற்றத்தைப் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தின் தலையில் பேரிடியை இரக்கும் மாற்றம் தன்னைச் செய்தார்.

பிறப்பால் சமூக அடிப்படிஅயில், கல்வி அடிப்படையில், பிறப்ட்ட சமூகத்தைச் சேர்ந்த வராத இருந்தால் மட்டும் ஓத்த, ஆண்டுக்கு ரூபாய் 9000க்குக் குறைவான வருவாய் உடையவராய் இருந்தால் மட்டுமே பிற்பட்ட வகுப்புகுரிய சலுகைகளைப் பெறவியலும்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்ற போதிலும் அவருடைய  வருவாய் ரூ.9000த்தைத் தாண்டி விடுமானால் அவர்கள் பிற்படுத்தப்பட்டவர் களுக்கான சலுகையைப் பெற முடியாது. ஒருவர் பின்தங்கியவராக நிர்ணயிப்பதற்கு அவருடையச் சமூகக் கல்வி அடிப்படையில் மட்டுமே கவனிக்க வேண்டும் என்றும் விதி உள்ளபோது அதிமுக அரசு-எம்.ஜி.ஆர் அரசு புதிதாக பொருளாதார அளவுகோலை தன்னைச்சையாக முடிவு செய்தது.

இப்படி முடிவு செய்ததை அவாளின் பத்திரிக்கைகள் எல்லாம்  ஆல வட்டம் வீதி வரவேற்றன. ஆசிரியர் வீரமணியின் விடுதலை இச்செய்தியை  வெறும் செய்தியாக வெளியிடாமல் பிற்படுத்தப்பட்டோருக்கு தமிழக அரசின் துரோகம் என்று விடுதலை 4.7.79இல் வெளிச்சம் போட்டுக் கொட்டை எழுத்தில் கொந்தளித்து அறிவித்தது. செய்தியில். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு மெலும் கூடுதல் சலுகைகள் வழங்கப்பட வேண்டும். என்ற கோரிக்கை எழுந்துள்ள நேரத்தில் தமிழ்நாடு அரசு, பிற்படுத்தப்பட்ட சமுதாய மக்களின் கழுத்தைப் பிடிக்கிறது.

ஆண்டு கொத்த வருமானம் 9 ஆயிரத்துக்குக் குறைவாக் இருப்பவர்கள் மட்டுமே பிற்படுத்தப்பட்டோருக்கு உள்ள சலுகைகள் பெற முடியும். தமிழ்நாடு அரசு இந்த படுபாதகமான உத்தரவை நேற்று வெளியிட்டு, நேற்று முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவித்து விட்டது. இந்திய அரசியல் சட்ட்த்தில் கல்வி, சமூக ரீதியாக என்றுதான் பிற்படுத்தப் பட்டவர்கள் வரையறுக்கப்பட்டுள்ளனர். பொருளாதார ரீதியாலல்ல தமிழக பிற்படுத்தப்பட்டவருக் குள்ள பொருளாதார அளவுகோலைப் புகுத்தியிருப்பது அரசியல் சட்டத்துக்கு விரோதம், பிற்படுத்தப்பட்ட சமுதாயத் துக்கும் துரோகமாகும் என்று செய்தி வெளியிட்டது.

எம்.ஜி.ஆர் அரசின் இந்த அறிவிப்பு ஜூலை 14,15 தேதிகளில் பிற்படுத்தப்பட்டோர் உரிமைக் காப்பு மாநாடு என்று அறிவித்த வேளையில் வந்த அறிவிப்பு அத்துடன் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு மற்றொரு பேரிடி என்று தலையங்கம் தீட்டியது விடுதலை.

“Socially and Educationally” சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என்றுதான் குறிப்பிட்டிருக்கிறதே தவிர,  ‘Economically’ பொருளாதார ரீதியாக   என்று எங்கும் குறிப்பிடவே இல்லை என்பது கோடிட்டு காட்டப்பட வேண்டிய கட்சியாளர் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான உண்மையாகும். “Socially and Educationally Backward என்பதுதான் நிர்ணய அளவுகோலாக இருக்க வேண்டுமே தவிர பொருளாதார அடிப்படை  என்பது ஒப்புக் கொள்ளப்படவே இல்லை.

சூத்திரன் படிக்கக் கூடாது என்பது மனுதர்மம், பிச்சை எடுக்கும் பார்ப்பனர் கூட சமுதாயத்தில் உயர்ந்தவர், கல்வியில் எழுத்தறிவு வாசனை உடையவர் என்பதைப் புரிந்து கொண்டால் பொருளாதார அடிப்படை என்பதை ஏன்  தந்தை பெரியார் அவர்கள் கடுமையாக எதிர்த்தார் என்பது யாவருக்கும் புரிந்து விடும்.

மாதம் 750 ரூபாய் வருமானம் வந்து விடுவதாலேயே பிற்படுத்தப்பட்ட குடிமகனுக்கு வந்து விடுவதாலேயே பல்லாயிரணக்கான ஆண்டுகளாய் அவன் தலைமுறை, தலைமுறையாகக் கல்வி, உத்தியோக வாய்ப்புகளில் அழுத்தி வைக்கப்பட்டு இருந்தது மாறிவிடுவா? மாறிவிட்டது என்று எதிர்ப்பார்த்தால்  அது நியாயமா?  என்று ஆசிரியரின்  விடுதலைத் தலையங்கம் செவிட்டில் அறைந்தது போல் கேள்வி எழுப்பியது என்றால் அது பொதுச்செயலாளர், விடுதலை ஆசிரியர் வீரமணியின் கேள்வி.

ஆச்சாரியார் செய்யத் துணியாததை, அவசர காலத்தில் ஆர்.பி சுப்பிரமணிய அய்யரும், தவே  அய்யரும் செய்யத் துணியாததை அண்ணா பெயரில் ஆட்சிக் கட்டில் ஏறிய எம்.ஜி.ஆர்  ஏறிச்செய்த துரோகத்தை அம்பலப்படுத்தினர் சமூகநீதி போராளி கி.வீரமணி.

இப்பிரச்சினையை மறுபரிசீலனை செய்து இவ்வாணையை திரும்ப பெற வேண்டுமென்று விடுதலை வாயிலாக வேண்டுகோள் விடுத்தார்.

வெறும் அறிக்கை எனும் காகித வாளைச் சுழற்றவில்லை.

4.7.79இல் தமிழக அரசு வெளியிட்ட விபரீத உத்தரவு பிற்படுத்தப்பட்ட சமுதாயத்துக்கு மிகப்பெரிய அநீதி என்று பிற்படுத்தப்பட்ட சமுதாயத் தலைவர்களைக் கூட்டிக் கூட்டறிக்கை வெளியிட்டு அநீதியை எதிர்க்கக் கட்சி வேறுபாடின்றி ஓரணியில் திரளுவோம் என தி.க., தி.மு.க., இ.காங்கிரஸ், உழைப்பாளர் முன்னேற்றக் கட்சி என்று பலரும் வடி அறிக்கை வெளியிட்டனர்.

அதேநாளில் மற்றொரு தலையங்கமும் பிறப்டுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு மற்றொரு பேரிடி என்று எழுதினார். அதில் மவுண்ட் ரோடு மகாவிஷ்னு எனப்பட்ட இந்து ஏடு முற்போக்கானது பொருள் பொதிந்ததும் என்று தலைப்பிட்டு தமிழ்நாடு அரசு ஆணையை மிகவும் பாராட்டி எழுதியிருப்பதை வெளிச்சம் போட்டக் காட்டி அக்கிரகாரம் அடையும் குதூகலத்தை வெளிப்படுத்தியது விடுதலை.

5.7.79 விடுதலை கட்டம் கட்டிச் செய்தி வெளியிட்டுப் பிற்படுத்தப்பட்டோர் மூடிய வழிகளைத் திறக்கச் செய்தது. (காண்க: பெட்டிச்செய்தி)

5.7.79ல் எழுதிய தலையங்கத்தில் விடுதலை இதைவிட பிற்படுத்தப்பட்டோருக்கு இனி பேராபத்து ஒன்றும் இல்லை! இதைவிடப் பெரியார் கொள்கைக்குத் துரோகம் வேறு எதுவுமில்லை என்று முடித்ததுடன் முரசொலியில் கலைஞர் கடிதத்தை வெளியிட்டதை விடுதலை மறுபிரசுரம் செய்தது. கலைஞரின் கடிதத்தின் தலைப்பு பிற்படுத்தப்பட்டோர் தலையில் அரசு போட்ட அணுகுண்டு சேலத்தில் நேரு கலையரங்கில் முன்னாள் அமைச்சர் முத்தையா அரங்கில் 14.7.79 அன்று பிற்படுத்தப்பட்டோர் உரிமை பாதுகாப்பு மாநாட்டினைக் கூட்டி, தமிழக அரசு புதிய உத்தரவினை ரத்து செய்யாமல் நியாயப்படுத்தும் பிடிவாதப் போக்கினை மேற்கொண்டால், ஒரு போராட்டத் திட்டத்தை வகுக்க மற்றவர்களுடன் கலந்து அறிவிக்கும் பொறுப்பான ஏற்றிட வேண்டும் எனத் திராவிடர் கழகப் பொச்செயலாளர் கி.வீரமணி அவர்களை மாநாடு ஒருமனதாகக் கேட்டுக்கொண்டது.

அடுத்து 22.7.79ல் திராவிடர் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிறப்டுத்தப்பட்டோர் உரிமை காப்பு மாநாடு என்.எம்.மணிவர்மா தலைமையில் நடைபெற்றபோது சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் நெ.து.சுந்தரவடிவேலு, பேராசிரியர் அன்பழகன், செங்கல்வராயன் முதலானவர்களும் கலந்துகொண்டனர்.

அரசு 9000 ரூபாய் உச்ச வரம்பு ஆணையை திரும்பப் பெறவில்லையெனில் ஒரு நாளில் பிற்படுத்தப்பட்ட மக்கள் தங்கள் வெறுப்பைக் காட்டும் அறிகுறியாக அரசு ஆணையின் நகலை எரித்துச் சாம்பலை முதல்வர் எம்.ஜி.ஆருக்கு அனுப்புவது அன்று முடிவு செய்யப்பட்டது. அத்துடன் இந்த ஆணைக்குச் சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால தடையும் பெறப்பட்டது.

புதுக்கோட்டையில் நடைபெற்ற தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவில் கழகப் பொதுச்செயலாளரிடம் 50 பேர் கொண்ட போராட்டப் பட்டியல், பட்டுக் கோட்டையில் 150 பேர் கொண்ட பட்டியல், குடந்தை வட்டத்தில் 100 பேர் என்று குருதிக் கையெழுத்திட்டு அனுப்பிய செய்தியை விடுதலை வெளியிட்டது.

9 ஆயிரம் ஆணை வழக்கு நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் விசாரணைக்குச் சென்றது.

எம்.ஜி.ஆர். அரசு நிர்ணயித்த பொருளாதார அளவுகோலுக்கு எதிராகப் பெரியாரின் தீர்க்கமான சிந்தனைகளில் ஊறிய கூரான வாதங்களைத் திமிழர் தலைவர் எழுப்யிதை விடுதலையின் பக்கங்கள் வீறுகொண்டு பரப்பியது கண்டு அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் திணரித்தான் போனார்கள். பிற்பட்ட சமூகங்கள் எல்லாம் வீரமணி அவர்களின் தலைமையில் கூடின.

அடுத்து வந்த 1980 தேர்தலில் தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தொகுதிகளில் தி.மு.க. கூட்டணியிடம் அ.தி.மு.க. படுதோல்வி கண்டு பாடம் கற்றது எனில் சமூகநீதிப் போரில் வீரமணியின் கைவாள் விடுதலையின் பங்கு முதன்மையானது.

இதை உணர்ந்த எம்.ஜி.ஆர் அரசு தேர்தல் முடிந்த உடனேயே சமூக நீதிக் கொள்கையில் செய்த அநீதியான மாற்றத்தைப் பொருளாதார அளவுகோல் என்ற நியதியைக் கைவிட்டது. பிற்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டு வந்த இடங்களையும் 50 விழுக்காடாக உயர்த்தியது. விடுதலையின் வீரவரலாறு இது.

– பேராசிரியர் ந.க.மங்கள்முருகேசன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *