பெரியாரை அறிவோமா?

நவம்பர் 01-15

1. பெரியார் அவர்கள் கோவிலுக்குப் போகும் தம் மனைவியின் மனப்போக்கை மாற்றிடக் கையாண்ட வழிமுறை யாது?

அ) சண்டை போட்டார் ஆ)ரவுடிகளை விட்டு மிரட்டுவதுபோல் நடிக்க வைத்தார். இ) பொதுக் கூட்டங்களுக்கு மனைவியை அழைத்துச் சென்றார். ஈ) ஒன்றுமே செய்யவில்லை.

2. பெரியார் கண்டித்த குறள் எது?

அ) குடி செய்வார்க்கில்லை பருவம் மடிசெய்து மானம் கருதக் கெடும் ஆ) எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு இ) கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக ஈ) தெய்வம் தொழாஅள் கொழுநன் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்பும் மழை

3. பெரியார் ஈ.வெ.ரா. வைக்கத்திற்கு வந்த நாள் எது?

அ) 13.4.24 ஆ) 14.4.24 இ) 15.4.24 ஈ) 16.4.24

4. பெரியாரின் ஆதரவோடு அவரது நண்பரான சுரேந்திரநாத் ஆர்யாவால் உருவாக்கப்பட்ட பார்ப்பனரல்லாத இளைஞர் மாநாடு 26.2.1928இல் எந்த ஊரில் நடைபெற்றது?

அ) தஞ்சாவூர் ஆ) ஈரோடு இ) சென்னை ஈ) திருநெல்வேலி

5. நான் இன்று பிரிவினை கேட்கவில்லை கேட்கிறேன் என்றால் நிபந்தனை இல்லாமல் இல்லை என 7.3.1973இல் கூறிய பெரியாரின் நிபந்தனை யாது?

அ) இந்திய ஆட்சியில் பிராமணர்கள் இல்லை; சுத்திரன் இல்லை; பார்ப்பானின் தாசிமகன் இல்லை; எல்லாக் குடிமக்களும் சம அந்தஸ்துள்ள, சகோதரத் தன்மையுள்ள மக்களாவார்கள் என்று சட்டம் செய்ய வேண்டும். ஆ) மாநிலத் தன்னாட்சி அளிக்க வேண்டும் இ) தேசிய இனங்களுக்கு சுயநிர்ணய உரிமை வேண்டும் ஈ) இந்தித் திணிப்பைக் கைவிட வேண்டும்.

6. மாநில மற்றும் மத்திய அரசுப் பணியாளர்களிடையில் ஒரு விசயத்தில் கண்டிப்பாகப் பேதம் (வேற்றுமை) கூடாது எனப் பெரியார் குறிப்பிடுகிறார். அது எது?

அ) கல்வித் தகுதி ஆ) ஓய்வு பெறும் வயது இ) வகுப்புரிமை ஈ) சம்பளம்

7. நாம் ஒருகாலத்தில் தேசம், தேசியம், தேசப்பற்று என்பதை நாகரிகமாகக் கருதிவந்தோம். ஆனால் இன்று அவைகளை உதறித்தள்ளிவிட்டோம் எனச் சொல்லும் பெரியார் எவற்றைப் பெரிதும் நாகரிகமாகக் கருதுகிறார்?

அ) விஞ்ஞானக் கண்டுபிடிப்பு பொருள்களைப் பயன்படுத்துவதை ஆ) உலக ஜீவகாருண்யம் இ) உலக சகோதரத்துவம் ஈ) எந்தப் பற்றும் இல்லாதிருத்தல்

8. குடிஅரசு முதல் இதழில், உண்மை அறிவு மக்களிடம் வளரவேண்டும் எனப் பெரியார் எழுதினார். அதில் உண்மை அறிவு என்பதாகப் பெரியார் எதைக் குறிக்கிறார்?

அ) நாத்திகம் ஆ) நாட்டு விடுதலை நாட்டம் இ) வேண்டாத பழையன கழிதல் ஈ) அனைத்து உயிர் ஒன்று என்று எண்ணுதல்

9. பெரியார் இலக்கணப்படி யார் மனிதன் எனப் பெயர் பெறுவர்?

அ) படித்தவர் ஆ) பிறருக்கு உதவுகிறவர் இ)சமுதாயப் பணிபுரிகிறவர் ஈ)மானம் உடையவர்

10. ஒரு குடும்பத் தலைவியின் சிறப்புகளைப் பற்றிய தந்தை பெரியாரின் நூல்

அ) குடும்ப விளக்கு ஆ) குடும்பத் தலைவி இ) குடும்பச் சுடர் ஈ) வாழ்க்கைத் துணைநலம்

 


 

பெரியாரை அறிவோமா விடைகள்

1. ஆ

2. ஈ

3. அ

4. அ

5. அ

6. ஈ

7. ஆ

8. ஈ

9. ஈ

10. ஈ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *