பதிவுகள்

நவம்பர் 01-15

  • கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டம் மீண்டும் அக்டோபர் 9 அன்று தொடங்கியது .
  • 1993ஆம் ஆண்டு நடைபெற்ற மும்பை தொடர்குண்டுவெடிப்பு, போதைப் பொருள் கடத்தல் போன்ற பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வரும் தாவூத் இப்ராகிமின் வலதுகரமாகக் கருதப்படும் இக்பால் மிர்சி லண்டனில் அக்டோபர் 11 அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

  • சிறீஹரிகோட்டாவில் இருந்து 4 செயற்கைக் கோள்களுடன் பி.எஸ்.எல்.வி. 18 ராக்கெட் அக்டோபர் 12 அன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

  • உ.பி.மாநிலம் நொய்டாவில் 684 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட பீம்ராவ் அம்பேத்கார் பூங்காவை உத்தரபிரதேச முதல்வர் மாயாவதி அக்டோபர் 14 அன்று திறந்துவைத்தார்.

  • நில மோசடி வழக்கில் சரணடைந்த மேனாள் கருநாடக முதல்வர் எடியூரப்பா பெங்களூர் மத்திய சிறையில் அக்டோபர் 15 அன்று அடைக்கப்பட்டார்.

  • தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17 மற்றும் 19 அன்று நடைபெற்றது. மாநில அளவில் சராசரியாக 75 சதவிகித ஓட்டுகளும் சென்னை மாநகராட்சியில் 48 சதவிகித ஓட்டுகளும் பதிவாகினஅக்டோபர் 21 அன்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன..

  • குஜராத் கலவரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அய்.பிஎஸ். அதிகாரி சஞ்சீவ்பட்டை ஜாமீனில் விடுவிக்க அகமதாபாத்  நீதிமன்றம் அக்டோபர் 17 அன்று ஆணையிட்டது.

  • காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு குறித்து விளக்கம் அளிக்க நடுவர் மன்றத்துக்கு உத்தரவிட வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் அக்டோபர் 18 அன்று நிராகரித்தது.

  • லிபியாவின் மேனாள் அதிபர் கடாபி பதுங்குகுழியில் பதுங்கியிருந்தபோது புரட்சிப் படையினரால் அக்டோபர் 20 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.

  • கூடங்குளம் அணுமின் நிலைய எதிர்ப்புக்கு, மக்களின் அச்சம் போக்க 15 பேர் கொண்ட வல்லுநர் குழுவினை அக்டோபர் 20 அன்று மத்திய அரசு அமைத்தது.

  • தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை  பெங்களூர் பரப்பன அக்ரகார மத்திய சிறை  நீதிமன்றத்தில் நடத்துமாறு பெங்களூர் சிறப்பு நீதிமன்றமும்  உச்ச நீதிமன்றமும் ஆணையிட்டதையடுத்து ஜெயலலிதா நீதிமன்றத்தில் அக்டோபர் 20,21 ஆம் தேதிகளில் ஆஜரானார்.

  • அக் 22 இல் தமிழக அமைச்சர் கருப்பசாமி இரத்தப் புற்று நோயால் காலமானார்.

  • அக் 23 அன்று துருக்கியின் தெற்குப் பகுதியான வான் மற்றும் எர்சிஸ் நகரங்களில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *