புரட்டாசி மாதம் வந்தாலே புளகாங்கிதம் அடைகிறேன். பகவான் விஷ்ணுவுக்கு உகந்த மாதமாம் புரட்டாசி. அசைவம் சாப்பிடக்கூடாதாம். பகவான் கோவிச்சுக்குவாராம். இதை இதை இதைத்தானே எதிர்ப்பார்த்தேன். மீன்கடை, கறிக்கடையில கூட்டத்தைக் காணோம். எனக்குப் பிடித்த வஞ்சிரம், வௌவா, நண்டை வறுத்து சாப்பிட, சுறாப்புட்டை வெளுத்து வாங்கிட, புரட்டாசி என்னும் வாய்ப்பு வழங்கிய இல்லாத ஆரிய பகவானே உனக்குக் கோடி நன்றி. நலிந்தோருக்கு நாளும் கிழமையும் ஏது?
ராஜேஷ் தீனா 25.09.2011 இரவு 9.49 மணி
2G ஊழலும், கடவுளும், ஒன்றுதான் இரண்டுமே பார்ப்பனக் கூட்டம் கட்டவிழ்த்துவிட்ட கட்டுக்கதை. உண்மையான இழப்பும் லஞ்சமும் எவ்வளவு தொகை என்று பார்ப்பன ஊடகங்கள் சொன்னதா இல்லை, ஒரு வழக்கை ஒரு வருடத்திற்கு மேலாக நடத்துகிறார்கள் என்றால் ஆதாரத்தைத் தேடித் தேடி அலையுது CBI. கல்லைக் காட்டி கடவுள் என்பதைப் போல ஊழல் என்ற சொல்லைக் காட்டி ஒரு தாழ்த்தப்பட்டவனைச் சிறையில் தள்ளிவிட்டு வேடிக்கை பார்க்கிறது பல பரதேசி பார்ப்பனக் கூட்டம்.
சதீசு குமார் இ.வே 28.09.2011 மாலை 3.55 மணி
ஆஜர்! ஆஜர்! ஆஜர்!
லோக குரு கொலை வழக்கில் ஆஜர்!
லோக குரு நீதிபதியுடன் சமரசம் பேசியதில் செய்தியாளர்கள் முன் ஆஜர்….
எழுத்தாளர் அனுராதா ரமணனனுடன் அறையில் ஆஜர்….
பெங்களூரு நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட ஜெயலலிதா ஆஜர் ..
காஞ்சி தேவநாதன் கற்பழிப்பு வழக்கில் ஆஜர்….
என்.தி. திவாரி சல்லாப வழக்கில் ஆஜர்…..
அழகிரி இராமமூர்த்தி 28.09.2011 மதியம் 1:59 மணி
நாங்குநேரி அருகே உள்ள சூரக்குடியில் நடந்த கோவில் விழாவில் பூக்குழி இறங்கும்போது இரண்டு தரப்பு பக்தர்கள் இடையே யார் முதலில் இறங்குவது என்று வாக்குவாதம் முற்றி கைகலப்பில் ஆரம்பித்து பிறகு அரிவாளால் ஒருவரை ஒருவர் மாறி மாறி வெட்டிக்கொண்டனர். உயிருக்குப் போராடிய அவர்களை வள்ளியூர், நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், பாளை அரசு மருத்துவமனையிலும் சேர்த்தனர்.
கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி என்று பெரியார் சொன்னது இன்றைக்கும் உண்மைதானே? அந்த ஈரோட்டுக் கிழவர் சொன்ன கருத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கலாம். ஆனால் எந்தக் கொம்பனும் தவறு என்று சொல்ல முடியாது…
இன்னும் எத்தனை வருடமானாலும் பெரியாரின் பேச்சும், எழுத்தும்தான் மானுடத்திற்கு வாழ்வியல்.
பரணீதரன் கலியபெருமாள் 29.09.2011 மாலை 4:48 மணி
சூப்பர் சிங்கரில் அம்மா, -பிள்ளை சென்டிமெண்டை லாவகமாகக் கையாளுகிறார்கள். நமக்கெல்லாம் அழுவாச்சி, அழுவாச்சியாக வந்தால் நிகழ்ச்சி வெற்றி பெற்றுவிட்டது என்று அர்த்தம்.
இதுபோன்ற நிகழ்சிகளில் பார்ப்பனர் அல்லாதவர்களின் பிள்ளைகளுக்கு 0.1 % ஒதுக்கீடு கூட கிடைக்காது போலிருக்கு.
-மேகவண்ணன் புதிய தடம் 24.09.2011 மாலை 3:27 மணி
Definition of God : The war against knowledge
பிரபு : செப்டம்பர் 25 மதியம் 1.32 மணி