- சொத்துக் குவிப்புப் புகார் காரணமாக, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனின் சகோதரர் கே.ஜி. பாஸ்கரன் கேரள மாநில அரசு வழக்குரைஞர் பதவியை ஜனவரி 7 இல் ராஜினாமா செய்துள்ளார்.
- ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பு ஊழல் விவகாரம் தொடர்பாக ஒரு நபர் கமிசன் நியமிக்கப்பட்டுள்ளது என்று மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவான் ஜனவரி 8 இல் கூறியுள்ளார்.
- இந்தியாவின் இலகு ரக விமானம் தேஜஸ் விமானப் படையிடம் ஜனவரி 10 இல் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.
- தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம் மற்றும் அசாம் ஆகிய 5 மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் என்று தலைமைத் தேர்தல் கமிசனர் குரோஷி ஜனவரி 9 இல் தெரிவித்துள்ளார்.
- சென்னை மாநகராட்சியின் விரிவாக்கச் சட்டம் சட்டசபையில் ஜனவரி 13 இல் நிறைவேற்றப்-பட்டுள்ளது.
- அமெரிக்காவில் உள்ள தெற்கு கரோலினா மாநிலத்தின் கவர்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியப் பெண் நிக்கி ஹாலே ஜனவரி 13 இல் பொறுப்பேற்றுள்ளார்.
- ஜனவரி 14 அன்று சபரிமலையில் மகரஜோதியைத் தரிசிக்கச் சென்ற பக்தர்கள் மீது ஜீப் மோதிய-தாலும், அதனையொட்டி நிகழ்ந்த நெரிசலினாலும் 106 பக்தர்கள் உயிரிழந்தனர்.
- பஞ்சமி நிலங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து ஆய்வு செய்து அரசுக்குப் பரிந்துரைகள் வழங்க ஓய்வு பெற்ற நீதிபதி மு. மருதமுத்து தலைமையில் குழு அமைத்து ஜனவரி 16 இல் முதல் அமைச்சர் கலைஞர் உத்தரவிட்டுள்ளார்.
- மும்பையில் 31 மாடி ஆதர்ஷ் கட்டிடம், கடலோர ஒழுங்குமுறை விதிகளை மீறிக் கட்டப்-பட்டுள்ளதால், அதை 3 மாதத்தில் இடிக்க வேண்டும் என்று மத்திய சுற்றுச் சூழல் துறை அமைச்சகம் ஜனவரி 17 அன்று உத்தரவிட்டுள்ளது.
- தமிழக மேல் – சபைத் தேர்தல் ஏற்பாடுகளை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில் இடைக்காலத் தடை விதிக்க உச்ச நீதிமன்றம் ஜன 17 இல் மறுத்துள்ளது.
- கருநாடக முதல் அமைச்சர் எடியூரப்பா மீது வழக்குத் தொடர ஆளுநர் பரத்வாஜ் ஜனவரி 21 இல் அனுமதி வழங்கியுள்ளார்.
- நீர் நிலைகள், தாவரங்கள், மரங்கள் என எந்தப் பக்கம் திரும்பினாலும் இயற்கை எழில் கொஞ்சும் அடையாறு சுற்றுச் சூழல் பூங்காவினை முதல் அமைச்சர் கலைஞர் ஜனவரி 22 இல் திறந்து வைத்துள்ளார்.

Leave a Reply