அர்ச்சகர் ஆனந்த கிருஷ்ணனுக்கு ஆகம விதிகளெல்லாம் அத்துப்படி!
ஆனாலும் அதெல்லாம் இப்போது தள்ளுபடி!
ஆனந்த சயனத்திலிருக்கும் ஆதிகேசவனுக்கு வியர்க்கிறதாம்?!
ஏ.சி. எந்திரம்
கண்டுபிடித்தது
மாட்டுக்கறி உண்ணும் மிலேச்சன் கேரியர்!
கருவாட்டு வியாபாரி கந்தசாமியிடம்,
அதில பாருங்கோ,
ஆண்டவனுக்கு….ஹி ஹி என்று சொல்லி ஆட்டையப் போட்டு அதை கர்ப்பக்கிரகத்தில் போட்ட பின்னே அலுப்பில்லாமல் போகிறது…
அர்ச்சகர் கேரியர்!
– க. அருள்மொழி,
குடியாத்தம்.
Leave a Reply