Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வார சந்தா செலுத்துங்கள்..

குலதர்மமா? சமதர்மமா? அனல் பறக்கும் ஆசிரியரின் பரப்புரை

தேர்தல் களம்

குலதர்மமா? சமதர்மமா?

அனல் பறக்கும் ஆசிரியரின் பரப்புரை

ஈழத் தமிழர், தமிழக மீனவர் பிரச்சினைகளில் காங்கிரஸ், பிஜேபி நிலைப்பாட்டில் வேறுபாடு கிடையாது!இந்திய நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இக்களத்தில் தனது அனல் பறக்கும் கருத்துகளை தி.க. தலைவர் கி.வீரமணி பரப்பி வருகிறார். பரந்துபட்ட ஜனநாயக நாடான இந்தியாவில் பெரும்பாலான வாக்காளர்களும், ஊடகங்களும் இதனை ஒரு திருவிழா போல கேளிக்கையாகப் பார்க்கும் நிலையே இருக்கிறது. ஆனால், இது பொழுதுபோக்கு நிகழ்வல்ல; சமூகத்தின் பழுதுபோக்க கிடைத்த ஒரு வாய்ப்பு என்பதே இவரது பரப்புரையின் நோக்கமாக இருக்கிறது. ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரைகளில் இருந்து…

பெரும்பான்மையானவர்கள் சிறுபான்மையினர் என அனைவரும் சமநிலையில் வாழ வைக்க வேண்டும். சிறுபான்மையினரின் உரிமையை அங்கீகரிக்க வேண்டும். பெரும்பான்மையினர் ஆளட்டும்; சிறுபான்மையினர் சுயமரியாதையோடு வாழட்டும்! என்று கூறுவதுதான் கலைஞர் தலைமையிலான அணி!

***

மூன்று முறை நாட்டிலே தடை செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ். இயக்கம் 4ஆவது முறையும் சோதனை வந்துவிடுமோ? தடை செய்து விடுவார்களோ? என்று எண்ணித்தான் தேடி தேடி மோடியைக் கண்டுபிடித்து நிறுத்தியிருக்கிறார்கள். இதை சாதாரண கண்ணோட்டத்தில் பார்த்தால் தெரியாது. பெரியார் கண்ணாடி எனும் நுண்ணாடியைப் போட்டுக் கொண்டு பார்த்தால் மட்டும் தெரியும்.

***

தமிழ்நாட்டில் 2 சதவிகிதம்கூட பா.ஜ.க.விற்கு ஓட்டு கிடையாது. யாரைப் பிடித்தால் தமிழ்நாட்டில் வரலாம் என்ற ஆசையில், மோடி அலைந்து திரிந்தபோது, யார் யாரெல்லாம் இங்கு பதவி – பசிக்காக உள்ளார்களோ அவர்களை தேடிப் பார்த்து கூட்டணி அமைத்துள்ளார். இதன் மூலம் என்ன தெரிகிறது? மோடி அலை வீசவில்லை. மோடி அலைந்து திரிந்து கொண்டு இருக்கிறார். ஊர் ஊராக. ஆகவே அது அலை அல்ல, விரிக்கும் வலை! அவர் வலை விரித்துக் கொண்டிருக்கிறார்!ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. தான் வலை வீசுகிறது. வலை வீசியதன் விளை வாக, அதிலே, சில மீன்கள் சிக்கி இருக்கின்றன பாவம்.
கடலில் இருந்தால், அந்த மீனுக்கு உயிர் உண்டு. ஆனால் வலையில் சிக்கிய மீன்கள் வியாபாரத்திற்கு கடைக்கு வருவதைத் தவிர அது உணவுக்கு பயன்படுமே தவிர வேறு எதற்கும் பயன்படாது.

மீன்களாவது ஆரோக் கியத்திற்குப் பயன்படும். இந்த மீன்களோ செத்துப் போன மீன்கள். அது ஆரோக்கியத்திற்குக் கூட சரியாக பயன்படாது. இதைத் தான் மக்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.

***

இங்கே தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்தவுடன் பல கட்சிகளுக்கு அல்வா கிடைக்கும்.
14.03.2014 தினமலர் ஏட்டில் வந்த ஒரு செய்தி; நாங்கள் சொல்லவில்லை. அவர்களை ஆதரிக்கும் ஏடே சொல்கிறது கேளுங்கள்!

லோக் சபா தேர்தலுக்காக பா.ஜ.க. அணி சார்பில் டெல்லியில் விருந்து நிகழ்ச்சி ஒன்றில் அருண்ஜெட்லி, ராஜ்நாத்சிங் இன்னும் மற்றவர்கள் கலந்து கொண்ட நிகழ்வில், அத்வானியும் கலந்து கொண்டார். அங்கு உள்ள ஒரு அதிகாரி அத்வானியிடம் நாடாளுமன்றத் தேர்தல் பற்றி சொல்லுங்களேன் என்று கேட்டவுடன் அத்வானி எனக்கு இங்கு ஜிலேபி கொடுத்தார்கள். நல்ல டேஸ்ட்டாக இருந்தது சாப்பிட்டு கொண்டு இருக்கிறேன் என்றார்.

அத்வானிக்கு -டில்லி அரசியலில் ஜிலேபி! எனவே டில்லி, அரசியல் ஜிலேபி கொடுக்கும் அரசியல். தமிழ்நாட்டு அரசியல் அல்வா கொடுக்கும் அரசியலாக இருந்து வருகிறது.

***

தேர்தல் அறிக்கைதான் ஓர் ஆட்சி எந்தத் திசையிலே செல்லப் போகிறது என்பதைக் குறிக்கும் அறிக்கை. 100 திட்டங்களை, செய்திகளை சொல்லியிருக்கிறார்கள் தி.மு.க. அறிக்கையில். சொல்வதையே செய்வோம்! செய்வதையே சொல்வோம்! என்பதுதான் தி.மு.க.;

அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில், ஏராளமான வசைமாரிகள் உண்டு; தி.மு.க. தேர்தல் அறிக்கையில் இசை இருக்குமே ஒழிய, வசை இருக்காது. அதிலே (அ.தி.மு.க.) வசை இருக்குமே ஒழிய இசை இருக்காது. இதை மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

கொள்கைக்காக ஆட்சியே தவிர, பதவிக்காக அல்ல. அதைத்தான் கடந்த 2004 தேர்த லில் உணர வைத்தீர்கள். அதை இப்போது 2014-லிலும் உணர வைக்கவேண்டும் மதுரை மக்களாகிய நீங்கள்.

***

ஜெயலலிதா அம்மையார் மக்களவைத் தேர்தல் தேதி அறிவித்தவுடன், நானே பிரதமர், பிரதமர் என்று சொல்லிவிட்டு, இப்போது திடீர் பல்டியாக, நான் கூட்டணியில் அங்கம் வகிப்பேன் என்று சொல்கிறாரே! யாருடன் அங்கம் வகிக்கப் போகிறார்?

அம்மையாரைப் பார்த்து நாங்கள் கேட்கும் ஒரே ஒரு கேள்வி:

நியாயமான வாக்காளர்கள் கேட்கின்ற கேள்வி; நீங்கள், எந்த அணியில் அங்கம் வகிக்கப் போகிறீர்கள்? நீங்கள் அங்கம் வகிக்கும் அணிக்கு யார் தலைவர்?  22 ஆம் தேதிக்குள் சொல்ல வேண்டாமா? யார் தலைவர் என்று அவர்களாலேயே சொல்ல முடியாது. அவர்கள் இரகசிய ஒப்பந்தம் செய்துள்ளார்கள் – செய்துகொண்டிருக்கிறார் கள். இதுதான் ஜெயலலிதா அம்மையாரின்  அரசியல் நாணயம், புரிந்துகொள்வீர்!

***

இப்போது புதிதாக பாவம் ஒருவர் புறப்பட்டு மோடிக்கு ஓட்டுப் போடுங்க! மோடிக்கு ஓட்டுப் போடுங்க! ஊழலை அவர் தான் ஒழிப்பார் -_ அவர்தான் மின்சாரத்தைக் கொடுப்பார் என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார். அவர் முன்பு சொல்வதை பின்பு சொல்வார்; பின்பு சொல்வதை முன்பு சொல்வார்.

செய்தியாளர்கள் கெட்டிக்காரர்கள், நீங்கள் எப்படியானாலும் மாற்றி எழுதிக் கொள்ளலாம். நான் எப்படியானாலும் பேசுவேன். உங்களுக்குப் புரிஞ்சிக்கிற சக்தியைப் பொறுத்தது என்று பேசுவார் – என்ன பேசுகிறோம் என்று பேசுகிற அவருக்கே புரியாது!

ஊழலைப்பற்றி பேசுகிறார் அவர். செய்தியாளர்கள் இங்கே இருக்கிறீர்கள். மோடி ராஜ்ஜியத்தில்  ஊழல் இல்லையா? இதற்கு விஜயகாந்த் பதில் சொல்லவேண்டும்.
குஜராத்தில் ஓடுகிற கிருஷ்ணா, கோதாவரி ஆற்றுப் படுகையிலிருந்து, ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பில் எரிவாயு தோண்டி எடுக்கும் ஒப்பந்தத்தை (டெண்டர்) ஒன்று, இரண்டல்ல, 20 ஆயிரம் கோடி ரூபாய் – குளோபல் என்ற நிறுவனத்திற்கு ஒப்பந்தப் புள்ளிகள் (டெண்டர்) எதுவுமே இல்லாமல்,  அப்படியே வெறும் சில ஆயிரம் கோடி ரூபாய்க்கு மோடி வழங்கியுள்ளார். இதை நாங்கள் சொல்லவில்லை; மத்திய கணக்குத் துறை அதிகாரி (சி.ஏ.ஜி.) சுட்டிக்காட்டுகிறார். இதேபோல், எட்டு ஊழல்களை சுட்டிக் காட்டுகிறார்.

ஒரே ஒரு ஊழலைப்பற்றி விளம்பரப் படுத்துகின்ற இந்நாட்டு ஊடகங்கள் இதைப்பற்றிய செய்திகளை வெளியிட்டு இருக்கின்றனவா?

***

பழைய மனுதர்மத்திற்கு இந்த நாட்டை அழைத்துச் செல்ல வேண் டும். குல தர்மம் கோ லோச்ச வேண்டும். சமதர்மம் தழைக்கக் கூடாது என்பதற்காக, இரண்டு அணிகள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.

என்ன அந்த இரண்டு அணி? சமுதாயத்தில் அவர்கள் வெளிப்படையாக இருக்கவில்லை மக்களுக்கு தெரியாது. வெளிப்படை யான புறத்தோற்றம் இருக்கிறதே அதைப் புரிய வைக்க வேண்டியது. எங்களது கடமை.

ஆகவேதான், அந்தப் பணியை செய்ய முன்வந்து இருக்கின்றோம். மற்றபடி இந்த தேர்தலில் எத்தனை இடம் என்று கேட்பதற்கு அவசியம் கிடையாது.

இந்த சமுதாயத்தில் கடைகோடியில் இருக்கின்ற ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டுமென்பதே எங்களின் ஆசை. இன்னாருக்கு இன்னது மட்டும்தான் என்பது மனுதர்மம். அனைவருக்கும் அனைத்தும் என்பதுதான் சமதர்மம்.

***

கலைஞர் ஆட்சியில் (காலத்தில்) 108, ஜெய லலிதா ஆட்சியில் 110 ஜெயலலிதா அம்மையார் மக்களுக்கு போடுவதோ 111, மக்களும் அவர்க ளுக்கு விடை 111 கொடுக்கப் போகிறார்கள். அவர்கள் சொல்லுவார்கள். அண்ணா நாமம் வாழ்க என்று. இப்போது தான் ஏன் அண்ணா நாமம் வாழ்க என்று சொல்கிறார்கள் என்று தெரிகிறது. அண்ணாவுக்கு நாமம், அண்ணா கொள் கைக்கு நாமம், இனிமேல் மக்களும் அஇஅதிமுகவுக்கு போடப் போவதும் நாமம் 111

One Ten. One Ten என்று அதுவும் தமிழில் சொல்வது கிடையாது. எம்டன் மாதிரி One Ten. One Ten  என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார்.

110 இருக்கிறது பாருங்கள் அதற்கு என்ன சிறப்பு என்றால், அவசரத்திற்காக வைத்திருக்கின்ற ஒரு கருவி.

மிகப்பெரிய தொழிற்சாலை இருக்கிறது என்றால், தீயணைப்பு கருவி மாதிரி ஒன்று வைத்திருப்பார்கள். இந்த தீயணைப்பு கருவி மாதிரி, 110அய் பயன்படுத்த வேண்டும். தொழிற் சாலையில் திடீர் தீப்பிடித்தால் இந்தத் கருவியை பயன்படுத்தலாம். அதை ஒன்றாவது இடத்திலும் வைக்க வேண்டுமென்று சட்டப்பூர்வமாக  இருக்கிறது. ஆனால் அடுப்பு கொளுத்துவதற்கு பயன்படுத்த முடியுமா? அது மாதிரி இந்த அம்மையார் என்ன செய்தார் தெரியுமா? அவசரத்துக்காக இருக்கிற றிணீமீக்ஷீஸீ (பேட்டன்). அதிலே ஒரே ஒரு சிறப்பு உண்டு. என்ன சிறப்பு என்றால் இவர்கள் யாரும் எழுந்து கேள்வி கேட்க முடியாது.
அவர் கருத்துக்குத்தான் பதில் சொல்ல வேண்டும். அது ளிஸீமீ கீணீஹ் ஜிக்ஷீணீயீயீவீநீ ஒரு வழிபாதை. யாரும் கேள்வி கேட்க முடியாது. அறிவிப்பு கொடுப்பார்கள் அதுதான் அதிமுக அரசு. ஆகவே 110ன் படி இவர்கள் வெளியேற வேண்டும் சட்டமன்றத்தை விட்டு. இல்லையேல் வெளியேற்றுவார்கள். மற்ற சட்டமன்றங்களில் ஏன்? நாடாளுமன்றத்திலே கூட இப்படி கிடையாதே!

***

நேற்றுவரை நான்தான் பிரதமர் என்ற ஜெயலலிதா அம்மையார், திடீர் என்று அங்கம் வகிக்கிறேன் என்றால் என்ன பொருள்? இதை நன்றாக கவனிக்க வேண்டும். கம்யூனிஸ்ட் நண்பர்கள் எல்லாம் வடக்கில் இருந்து வந்தார்கள். இங்கே உள்ளவர்களும் கைகளை தூக்கி அவர்கள் கையை பிடித்தார்கள். தூக்கிய கையோடு சரி, கையை கீழ போட்டவுடன் கும்பிட்டார்கள். யார் மற்றவர்கள்? அந்த அம்மா இல்லை.

அவர்கள் நால்வர் அணியாக இருப்பார்கள், சைவ சமயக் குரவர்கள் நான்கு பேர் மாதிரி, நால்வர் அணி. நம்ம இடதுசாரி தோழர்கள் பாவம், வெகு காலம் காத்துக் கொண்டிருந்தார்கள். நம்மிடம் பேசிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் எந்தத் தொகுதி என்று அறிவிக்கப்படவில்லையே என்று இவர்களும் கேட்டுக் கொண்டு இருந்தார்கள்.

நம்பிக்கை இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு, அவர்கள் உட்கார்ந்து கொண்டி ருந்தார்கள். அதுவும் ஒரு இலை அல்ல, இரட்டை இலை. நல்லா பரிமாறுவார்கள். நல்லா பரிமாறுவார்கள் என்று நினைத் தோம். ரொம்ப நேரம் உட்கார்ந்து இருக்காங்க உட்கார்ந்தே இருக்காங்க! என்னங்க ஒன்றுமே காணோம் என்று கேட்டார்கள். நால்வர் அணியில் இருந்து இரண்டு பேர் வந்தார்கள். வந்தவுடன் கும்பிட்டார்கள்.

நண்பர்களாக நாம் சேர்ந்தோம் – நண்பர்களாகவே பிரிவோம்! என்று அவர்கள் கழற்றி விடப்பட்டார்கள். அதிகமாக அவர் களை நாம் பேசவேண்டாம். அவர்கள் எந்த அணியில் இருந்தாலும், எதிர்த்தாலும் கொள்கை ரீதியாக நண் பர்கள், யாரையும் எதிரியாகப் பார்த்து நமக்குப் பழக்கமில்லை. அவர்களை அவமதித்தது எங்களுக்கு வேதனை அளிக்கிறது.

பிரதமர் கனவு கண்டவர்கள். இப்பொழுது நாம் தமிழ்நாட்டில் அதிகம் இடம் வெற்றி பெற்று, மத்தியில் யாருக்காவது ஆதரவு தருவோம் என்று சொல்கிறார்கள். அது ஊடக நம்பிக்கை, உளவுத் துறை நம்பிக்கை. ஆனால் மக்களின் தீர்ப்பு வேறு வித மாக இருக்கும் என்பதை தேர்தல் முடிந்த பின் பார்க்கலாம்.

***

இடதுசாரி தோழர்கள் எங்களை ஏன் வெளியே போக சொன்னார்கள் என்பது எங்களுக்கு தெரிகிறது; காரணம், மோடியோடு இரகசிய ஒப்பந்தம். ஆகவே நாங்கள் இருந்தால் வசதிகுறைவாக இருக்கும் என்று இடையில் உட்கார வைத்தார்களே தவிர, பரிமாறாமல் அனுப்பி விட்டார்கள்.

பரிமாறினால் மோடி கோபித்துக் கொள் வார் என்று பரிமாறாமல் இருந்திருக்கிறார்கள் என்ற நிலைதான் இவர்களுக்கு ஏற்பட்டது. இந்த திமுக அணி கொள்கைக் கூட்டணி, நாம் இருக்கிற கூட்டணி அடிப்படை கொள்கையில் மாறுபட்டு இருக்கிறோமா? இதுவல்லவா கூட்டணி! இந்த அம்மையார் செய்தது போல், யாராவது இதுபோல் அனுப்பப்பட்டார்களா? இதுவா அரசியல் நாணயம்?

***

தமிழ்நாட்டிலே, பெரியார் பிறந்த மண்ணிலே, திராவிடர் இயக்கம் வளர்ந்த மண்ணிலே, பேத மில்லாப் பெருவாழ்வு மாமன், மச்சான், மதத் தால் பிரிவில்லை, ஜாதிகளால் பிளவுபடுவ தில்லை. இந்தக் கூட்டத்தை பார்த்தாலே தெரியும். இப்படிப்பட்ட சூழல் வடக்கே உண்டா? மற்ற மாநிலங்களில் உண்டா? என்றால் கிடையாது அப்படிப்பட்ட மதக்கலவரங்கள் இங்கேயும் உருவாக்க வேண்டும். ஜாதிகளை முன்னிறுத்த வேண்டும் என்பதற்காக அமைந்ததுதான் பிஜேபி கூட்டணி.

ஜாதி  வெறி, மத வெறி, பதவி வெறி இதை மூன்றையும் கூட்டினால் ஒரு கூட்டணி இதற்கு பெயர்தான் பி.ஜே.பி. கூட்டணி.

***

தமிழ்நாட்டில் அமைதி இல்லை! எங்கு பார்த்தாலும் கொலை, கொலை இல்லாத நாள் உண்டா? இரட்டைக் கொலை, மூன்று கொலை, நான்கு கொலை கொலை கொலையாய் கொலை ஒய் திஸ் கொலை வெறின்னு  ஏன் பாடல் சினிமாவில் எடுத்தார்கள் என்று தெரிகிறது. இதுதான் அம்மையார் (ஜெயலலிதா) ஆட்சியின் அமைதியா? வளமா? வளர்ச்சியா?

கொலை எங்கும் நடந்து கொண்டு இருக்கிறது. பத்திரிகையைத் திருப்பினால், தொலைக் காட்சியை பார்த்தால் இன்றைக்கு கொலைச் செய்தி இல்லை. தமிழ்நாடு அமைதியாய் இருக்கிறது என்று சொல்ல முடியுமா?

சிறைச்சாலைக்குள் கொலை, கோர்ட்டில் வாதாடச் சென்றால் கொலை, தமிழ்நாட்டைத் தவிர வேறு எங்காவது உண்டா? இதுபோல். அப் புறம் எங்க அமைதி வளம் வளர்ச்சி?  எண்ணிப் பாருங்கள் வாக்காளர்களே! சிந்தித்து வாக்களி யுங்கள்! நல்ல தலைமுறையை உருவாக்க, அவர் களின் எதிர்காலம் சிறப்பாக அமைய ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களியுங்கள். வெற்றி பெறச் செய்யுங்கள்.

***

(பாஜக) கூட்டணியில் தமிழ்நாட்டுக்குத்தான் ஒப்பந்தம் போட்டோமே தவிர பாண்டிச்சேரி கூட்டணிக்கு ஒப்பந்தம் போட வில்லை ஒன்றும் சொல்லவில்லை என்று சொல்கிறார்கள். அறிவு ஆசான் பெரியார் தான் பழமொழி சொல்வார்கள். தலைக்கு ஒரு சீயக் காய், தாடிக்கு ஒரு சீயக்காயா? என்று. அதுதான் நினைவுக்கு வருகிறது. எனவே, பிஜேபி தலைமை யில் உள்ள அணி கூட்டணி அல்ல, அது சீட்டணி!

யாருக்கு எத்தனை சீட்டு என்று கேட்கக்கூடிய, கேட்ட சீட்டணி – கூட்டணி அல்ல.
அந்த கூட்டணியில் (பாஜக) தலைவர்கள் ஒத்துப் போகிறார்களா? அவர் வந்தால், இவர் வரமாட்டார். இவர் வந்தால் அவர் வரமாட்டார்.

ஆகவே, அது ஒரு சர்க்கஸ் கம்பெனி. அதிலே ரிங் மாஸ்டர் மோடி. மற்றவர்கள் எல்லாம் ஜாடி. அவர்கள் ஜோடியாக வேலை பார்க்க மாட்டார்கள். ஜாடியாகத்தான் இருப்பார்கள்.

***

அந்தக் காலத்தில் சொல்லுவார்கள். யுத்தத்தில் முதலாவது, பலியாவது உண்மை என்று ஆங்கிலத்தில் பழமொழி உண்டு. ஆனால், போரில் உண்மைகள் பலியாவதைவிட, தேர்தலில்தான் உண்மை பலியாவது அதிகம். ஏனென்றால், நம் நாட்டில் உண்மைகள் தேர்தலில் வெளியே வராது.

அம்மையாருக்கு (ஜெயலலிதா) இப்பொழுதே தேர்தல் பயம் வந்து விட்டது. நாம் எல்லாம் கஷ்டப்பட்டு ரோட்டில் வருகிறோம். அவங்க மேலே இருந்து வருவாங்க, பேசிவிட்டு வசதியாக போவாங்க! நாளுக்கு நாள் அம்மையாருக்கு (பிரதமர் கனவு) சுருதி குறைந்து அங்கம் வகிப்போம்! மத்தியில் வரக்கூடிய ஆட்சியிலே என்கிறார்கள்.

பிரதமர் கனவு கண்டு பிளக்ஸ் எப்படி வைத்தார்கள்? வருங்கால பாரதமே! பாரதம், பாரதம் – பார் அதம் ஆட்சி. பார் அதான் அவரின் ஆட்சி.

தொகுப்பு: சாமி திராவிடமணி

படங்கள்: சிவகுமார்