ஆண்மையின் ஆணவமா?
ஆண் நிர்வாணம்
கடவுள் ஆகிறது!
பெண் நிர்வாணம்
காட்சி ஆகிறது!
காட்சி ஆனதோ
கை தொழுகிறது.
கடவுள் ஆனதோ
காமம் கக்குகிறது!
முரண் பாடுகள்
காலங் காலமாய்
சமூகச் சிக்கலா?
ஜாதீய தீண்டலா?
ஆண்மையின் ஆணவமா?
காதல், கண்ணீர்
இன்பம், துன்பம்
உரிமை, உணர்ச்சி
இருவருக்கும் பொதுவென
இன்றளவும் உலகம் நினையாதது ஏனோ?
தன் குழந்தையின்
அம்மணத்திற்கு ஆடை
அடுத்தவர் குழந்தை
ஆடை விலக்கல்.
திருத்தப்பட வேண்டியது
ஆடையா, ஆணவமா?
மறைக்கப்பட வேண்டியது
காதலா காமமா?
மாற்றம் தேவை!
பெண்ணின் ஆடையிலா?
ஆணின் பார்வையிலா?
சமூகத்தின் பதில்நோக்கி
காத்திருக்கும் பெண்குலம்!
– குடியாத்தம் ந.தேன்மொழி
Leave a Reply