எது அறிவியல்
நீரை சூடு படுத்தினால் கொதிக்கும். எப்போது கொதிக்கும்? நீரின் வெப்பம் 100 டிகிரி அடைந்தவுடன் கொதிக்கும்.
எத்தனை தடவை 100 டிகிரி வெப்பத்தில் கொதிக்கும் ? ஒராயிரம் முறை அல்ல, ஈராயிரம் முறை அல்ல, ஒரு லட்சம் முறையானாலும், ஒரு கோடி முறையானாலும், ஒறாயிரம் கோடி முறையானாலும் 100 டிகிரி வெப்பத்தை அடைந்தால்தான் நீர் கொதிக்கும்.
இதுதான் – இப்படிதான் என்று உறுதியாக கூறுவது அறிவியல்.
இந்த மாதிரியும் இருக்கலாம் – இப்படியும் இருக்கலாம் என்பது யூகம் யூகம் யூகம் மட்டும்தான்.
ஜோசியம், ஜாதகம், நல்ல நேரம், கெட்ட நேரம் போன்றவற்றால் – அறிவியல் மாதிரி இதுதான் இப்படிதான் என்று சொல்ல இயலுமா ?
இப்படி சொல்ல இயலவில்லை என்றால், ஜோசியம், ஜாதகம், நல்ல நேரம், கெட்ட நேரம் இவை எவையுமே கண்டிப்பாக அறிவியல் இல்லை!
அறிவியல் இல்லாத ஒன்றை யூகத்தின் அடிப்படையில் நம்புவது நம்பாதது அவரவர் விருப்பமாக இருக்கலாம் ?
ஆனால், அறிவியல் இல்லாத ஒன்றை வைத்துக் கொண்டு, எடுத்து காட்டுக்கு, ஒருவருக்கு செவ்வாய் தோஷம் என்றும், கேட்டய நட்சத்திரம் என்றும், வரப் போற மாமியாருக்கு ஆகாது என்றும் சொல்வதெல்லாம் கடைந்தெடுத்த ஏமாற்றுத்தனம் அல்லாமல் வேறென்ன ? இதை விட அறிவுக்கு பூட்டு போடக் கூடிய செயல் இந்த லோகத்தில் தமிழகத்தை தவிர வேறெங்கே காண முடியும் ?
– – – _ ஹரிஷ் கமுககுடி மாரிமுத்து]
மேதைமை
அறிஞர் பெர்னார்ட்ஷா நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர். அவரது படைப்புகளுக்குப் பதிப்பாளர்கள் ஒரு எழுத்துக்கு இவ்வளவு என்று பணம் கொடுப்பார்கள். பெரும்பாலும் ஓர் எழுத்துக்கு ஒரு ஷில்லிங் கொடுத்து விடுவார்கள்.
இதைக் கிண்டல் செய்ய நினைத்த ஓர் இளைஞன், பெர்னார்ட்ஷாவுக்கு ஆறு ஷில்லிங் அனுப்பி, இதைப் பெற்றுக் கொண்டு, ஷா தன் கைப்பட ஒரு கடிதம் தனக்கு எழுத வேண்டும் என்று கேட்டிருந்தான்.
பெர்னார்ட்ஷா, பண விஷயத்தில் எப்போதும் கறாராக நடந்து கொள்பவர்.
எனவே, தனது கடிதத்தில் ஆறு எழுத்திற்கு மேல் ஓர் எழுத்து கூடக் கூடுதலாக இருக்கக் கூடாது என்று, ஆறு எழுத்துகளைக் கொண்ட ஒரு வார்த்தையை எழுதி, அந்த இளைஞனுக்கு அனுப்பி வைத்தார்.
அந்த ஆங்கில வார்த்தை என்ன தெரியுமா? – Thanks.
பிரபலமான விஞ்ஞானியான தாமஸ் ஆல்வா எடிசன் ஒரு முறை விருந்தொன்றில் கலந்து கொண்டபோது ஒரு நண்பர் அங்கு வந்து பேச ஆரம்பித்தார். எடிசனிடம் அவர் தொடர்ந்து இடை வெளியில்லாது நிறுத்தாமல் பேசிக் கொண்டிருந்தார். எடிசனுக்கோ தாங்க முடியவில்லை. இருந்தாலும் அங்கிருந்து நகலவும் வழியில்லை.
நண்பர் அருகிலிருந்த இன்னொருவரிடம் எடிசனை அறிமுகப் படுத்தினார். பேசும் எந்திரமான கிராம போன் ரிக்கார்டைக் கண்டு பிடித்தது என் நண்பர் எடிசன்தான், என்றார்
எடிசன் அவரிடம் சொன்னார், நான் பேசும் எந்திரத்தைக் கண்டு பிடித்தது உண்மைதான். ஆனால் நினைத்த நேரத்தில் அதை நிறுத்தி விட முடியும்.
– சந்திரன் வீராசாமி
ஆதமும் ஏவாளும்
சாப்பிட்ட பழம் என்ன?
ஆதமும் ஏவாளும் சாப்பிட்ட பழம் என்ன என்ற கேள்விக்கு நீங்கள் உடனடியாக ஆப்பிள் என்று சொல்வீர்கள் என்று தெரியும்
விவிலியம் என்ன சொல்கிறது என்று பார்ப்போமா.
Genesis 2:9 And out of the ground made the LORD God to grow every tree that is pleasant to the sight, and good for food; the tree of life also in the midst of the garden, and the tree of the knowledge of good and evil.
Genesis 2:17 but of the tree of the knowledge of good and evil, thou shalt not eat of it; for in the day that thou eatest thereof thou shalt surely die.’
அது என்ன நன்மை மற்றும் தீமை குறித்த அறிவின் மரம்… இதை விட ஞானப்பழம் என்ற பெயர் பொருத்தமாக உள்ளதா
எத்தியோபியர்கள் படிக்கும் ஈனோகின் புத்தகத்தில் (31:4) இந்த மரம் குறித்து விளக்கப்பட்டிருக்கிறது. அது புளிய மரம் போலிருந்தது. அதன் பழங்கள் மெல்லிய திராட்சைபழங்களை போலிருந்தன, அதன் வாசனை பரவியிருதது
யூதர்களின் தல்முத் என்ற புத்தகம், அந்த பழம் திராட்சை என்கிறது. மற்றொரு தல்முத கதை ஏவாள் அந்த பழத்திலிருந்து வைன் அருந்தினாள் என்கிறது. அதை அத்திப்பழம் என்றும், கோதுமை என்றும் கூட கருதுகிறார்கள்
சிலர் அந்த பழம் மாதுளை என்று கூட சொல்கிறார்கள்.
மேல்நாட்டு ஓவியர்கள் மட்டுமே அந்த பழத்தை ஆப்பிள் ஆக்கினார்கள். (அவர்களுக்கு தெரிந்த பழம் அதுதான்). அதனால் தான் மேல் நாட்டு (ஐரோப்பிய) ஓவியங்களில் அந்த மரம் ஆப்பிள் மரமாகவும் அந்த பழம் ஆப்பிளாகவும் காட்டப்படுகின்றன. அவர்கள் (ஐரோப்பிய ஓவியர்கள்) என்ன செய்வார்கள். அவர்களுக்கு தெரிந்த பழத்தை ஓவியத்தில் வரைந்து விட்டார்கள். ஒரு வேளை ரவி வர்மா, இந்த காட்சியை வரைந்திருந்தால் தேங்காய் வரைந்திருக்கலாம்
அது இயேசுவும் அல்ல அது ஆப்பிளும் அல்ல
– மரியானோ ஆண்டோ புரூனோ மஸ்காரெனாஸ்
குடும்பத்தாலும் சமூகத்தாலும் வெறுத்து ஒதுக்கப்படும் திருநங்கைகளால் எப்படி இந்தச் சமூகத்தை நேசிக்க முடியும்? மத்திய மாநில அரசுகள் குறுகிய நீண்டகாலத் திட்டங்களைச் செயல்படுத்தி நிரந்தர வருவாய்க்கு வழிசெய்தால்தான் திருநங்கைகளின் நிலை மாறும்.
_ கல்கி, சகோதரி அறக்கட்டளை நிறுவனத் தலைவர், விழுப்புரம்
Leave a Reply