இந்தியாவின் ஜப்பான், குஜராத் என்று குட்டிக்கரணம் அடித்து சத்தியம் செய்யும் அறிவு ஜீவிகள் இந்தியாவில் அனேகம்!
குஜராத் மாநிலத்தின் லட்சணம் என்னவென்று கீழ்க்காணும் பட்டியலைப் படித்துவிட்டு இனி குஜராத் ஜப்பான், சிங்கப்பூரு என்று அளந்துவிடாமல் இருப்பது நல்லது….!!!
- இந்தியாவில் தனி நபர் வருமானத்தில் குஜராத்திற்கு 10 ஆம் இடம்.
- இந்தியாவில் ஹூயூமன் டெவலப்மெண்ட் (527 புள்ளிகள்) குஜராத்திற்கு 14ஆம் இடம்.
- ஜிடிபி (Gross Domestic Product) இந்தியாவில் குஜராத்திற்கு 5ஆம் இடம்.
- வளர்ச்சி என்ற சொல் அறியாத உத்தரப் பிரேதசம்கூட 3ஆம் இடத்தில் உள்ளது.
- எழுத்தறிவில் குஜராத்திற்கு 18ஆம் இடம்.
- ஏழைகள் குறைந்த மாநிலத்தில் குஜராத்திற்கு 10ஆம் இடம்.
- சாலைகள் பராமரிப்பில் குஜராத்திற்கு 11ஆம் இடம்.
- தொழிற்சாலைகள் அதிகம் நிறைந்த மாநிலத்தின் பட்டியலில் முதல் நான்கு மாநிலங்களில் குஜராத்தின் பெயர் இல்லை.
- பிரவசக் கால குழந்தைகள் இறப்பு விகிதம்: ஆயிரத்திற்கு 62 குழந்தைகள் இறக்கின்றன. பிற மாநிலங்களில் 12 முதல் 14 வரை.
- மனிதர்களின் சராசரி ஆயுள் காலம்:
ஆண்கள் 63..12, பெண்கள் 64.10
பிறமாநிலங்களில் சராசரியாக ஆண்களுக்கு 71.67 பெண்களுக்கு 75 வயது வரை உயிர் வாழ்கின்றனர்.
(இன்னும் ஏராளமான தகவல்களுடன் வெளியிடப்பட்டுள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எழுதிய 16ஆம் மக்களவைத் தேர்தல்: வாக்காளர்களே சிந்திப்பீர் எனும் நூலிலிருந்து.)