இனிப்பு, இன்பம் என்ற பொருள்களில் தமிழர்களால் போற்றப்படும் கரும்பு தைப் பொங்கல் அன்று தமிழர்களின் வீட்டில் இடம்பெறும் பொருள்களுள் ஒன்றாகும்.
கி.பி.636ஆம் ஆண்டு அய்ரோப்பாவில் அறிமுகம் செய்யப்பட்ட கரும்பு இன்று 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பயிர் செய்யப்படுகிறது.
கரும்புச் சாற்றில் உள்ள ரசாயனங்கள் உடலில் சேர்ந்துள்ள தேவையற்ற கொழுப்பைக் கரையச் செய்து உடல் எடையைக் குறைக்கும் என்று ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள உணவு உயிர் தொழில்நுட்ப வல்லுநர் ஆங்குர் தேசாய் மற்றும் லாப்ரோப் பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வு முடிவு கூறுகிறது. மேலும், உடல் சோர்வை நீக்கி ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி உடலின் சக்தியை அதிகரிக்கச் செய்வதாகவும் கூறப்பட்டுள்ளது.
கரும்பில் இயற்கையாக உள்ள அல்கலைன் என்னும் பொருளுக்குப் புற்று நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் உள்ளது. பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துகள் அதிக அளவில் இருப்பதால் உடலினை ஆரோக்யமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
கரும்பில் உள்ள இனிப்பு, இரத்தத்தில் உள்ள குளுக்கோசின் அளவினைச் சீராக வைக்கும் தன்மை உடையதால் நீரிழிவு நோயாளிகளும் சாப்பிடலாம். தொற்று நோய்களினால் ஏற்படும் எரிச்சல் அரிப்பைச் சரிசெய்யும் ஆற்றல் கரும்புச் சாற்றுக்கு உள்ளது. மேலும், அதிகமாகச் சாப்பிட்டு விட்டோமே என்று நினைப்பவர்கள் ஒரு டம்ளர் கரும்புச் சாற்றினைக் குடித்தால் எளிதில் ஜீரணமாகிவிடும்.