திருவாளர் சோ என்று ஒருவர் இருக்கிறார். நடுநிலைக்கே அவர்தான் குத்தகைதாரர் என்று பார்ப்பன ஊடகங்களால் முடிசூட்டப் பட்டவர். நம்ம சூத்திர முண்டங்கள் சிலதுகளும் இதனை வழிமொழிவதுண்டு. இரட்டைநாக்குப் பேர்வழியான இந்தப் புளுகுணி தன் இனத்தின் நலனை மட்டுமே முன்னிறுத்திப் பேசும்; எழுதும். பல நூறுமுறை இதன் பார்ப்பனக் குள்ளநரித்தனத்தை நாம் தோலுரித்திருக்கிறோம். இதோ இது அண்மையில் நடந்தது. அக்டோபர் 18 அன்று பா.ஜ.க.வைச் சேர்ந்த நரவேட்டை மோடி சென்னை வந்திருந்தார். சென்னைப் பல்கலைக் கழக மண்டபத்தில் வடநாட்டு சோ-வான அருண்சோரியின் நூலை வெளியிட்டார். அதனைப் பெற்றுக்கொண்ட துக்ளக் சோ அய்யர்வாள் பிரதமர் மன்மோஹன் சிங்கைக் கேலி செய்து பேசினாராம். பேசியதோடு மன்மோஹன்சிங் எப்படி சோனியா, ராகுலுக்கு அடங்கி இருக்கிறார் என்பதை நடித்துக்காட்டினாராம். அதனை மோடி ரசித்தாராம்.
சரி, அவர் நடித்துக்காட்டட்டும். இதில் நமக்கொன்றும் கவலை இல்லை; ஆனால், சோனியா, ராகுலுக்குப் பணிவதை விடக் கேவலமாக தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குக் குனிவதையே மந்திரிமார்கள் வழக்கமாக்கிக் கொண்டுள்ளனரே, இதனை இதுவரை எத்தனை முறை இந்த நடுநிலை(?) நாற்றமெடுக்கும் சோ கேலி செய்திருப்பார்? இந்த முறை ஜெயலலிதா ஆட்சிப் பொறுப் பேற்கும் போதே அமைச்சர்கள் அந்தக் குனி குனிந்தனரே, எதிரே இந்த சோ உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருந்தாரே, அங்கு மட்டும் எப்படி இவரது நடுநிலை வேலை செய்யவில்லை.
மன்மோஹன் சிங்கைக் கேலி செய்யும் சோ அய்யர், தன்மானத்தை அடகுவைக்கும் அந்த மேடைக்கு முன்னே அமர்ந்திருக்கலாமா? தெரிந்துகொள்ளுங்கள் தமிழர்களே… ஒரு பார்ப்பன அம்மையாரின் காலில் ஒரு தமிழன் விழுவதை ரசிப்பது சோ பார்ப்பனரின் குணம். அது அந்த இனத்துக்கே உரிய தனிக்குணம்.
அடுத்து கருமாதிப் பத்திரிகைக்கு வருவோம். தினமல(ம்)ர் என்றொரு நாளிதழ் இருக்கிறது.இதற்கு தமிழ், தமிழினம், திராவிடம், ஈழத்தமிழர் என்றால் பேதியாகிவிடும். அவ்வளவு அலர்ஜி. தமிழின வளர்ச்சிக்குப் போராடுபவர்களை அவ்வளவு கேலி செய்யும். தி.க., தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், பா.ம.க,. என கொள்கை முழங்கும் கட்சிகளையெல்லாம் சிறுமைப்படுத்தும்.
ஆனால், இதனிடம் சில நாட்களுக்கு முன் ஒரு மாற்றம். கடந்த வாரம் ஜாதிக் கட்சிகளையெல்லாம் திரட்டி பா.ம.க. ராமதாஸ் தேர்தலில் நிற்கப்போவதாக அறிவித்தார்.இதுவரை சமூகநீதி, தமிழ், தமிழினம், ஈழத்தமிழர், பெரியார் என்றெல்லாம் பேசிவந்த ராமதாஸ், ஒரு தேர்தலில் காணாமல் போகவே ஜாதி ஆயுதத்தைக் கையில் எடுத்தார். அவ்வளவுதான் தினமல(ம்)ர் பா.ம.க.வின் செய்தியை படத்துடன் 6 பத்தியில் போடுகிறது.(தினமலர் சென்னை பதிப்பு, பக்.12, 23.10.2013).
சமூக நீதி பேசியவர் ஜாதிக் கட்சியானபின் அதனை ஊக்குவிக்கிறது. அதுவும் இன்னொரு ஜாதிக்கட்சிக்காரரைச் சந்திக்கும் நிகழ்ச்சிக்கே இவ்வளவு பெரிய விளம்பரம். தமிழினத்தை மேலும் மேலும் பிரிக்கும் செயலைச் செய்யும் துரோகிகளுக்கு விளம்பரம் வழங்கும் வேலையை தினமல(ம்)ர் செய்யத் தொடங்கியுள்ளது.திராவிட இயக்கத்தால் ஒழிக்கப்பட்ட ஜாதிவெறியை மீண்டும் உயிர்ப்பிக்கும் செயலுக்கு ஊக்கம் கொடுக்கிறது.
தமிழர்களே…ஆரியத்தின் நோக்கம் என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டாமா?
– பெரியாரிடி