நீங்க ஒருத்தரோட முரண்பட்டீங்கன்னா அவன் சொல்றது தப்புன்னு நிரூபியுங்க. ஒருத்தரோட கருத்து தப்புன்னு நிரூபிக்க உயிரை எடுக்காதீங்க. பகுத்தறிவுவாதியான நரேந்திர தபேல்கர் மாதிரியான ஆட்கள் கொல்லப்படுவது, இந்தியாவுக்கே பெருத்த அவமானம். இத்தனை குழப்பங்களுக்கும், பிரச்சினைகளுக்கும் நடுவிலே வட இந்தியாவுக்கு ஏற்பட்ட பாதிப்பு தமிழ்நாட்டுக்கு இல்லைங்கிறதுல நான் மிகவும் பெருமைப்படுறேன்.
***
நான் சுயமரியாதை இயக்கத்தோட உருவாக்கம். நான் பிறந்தது எங்கே? சுப்ரபாதம் என் காதில் ஒலிக்கிற சூழல்ல நான் பிறந்தேன். 10 வயசு வரைக்கும் ஒரு நாளைக்கு 2 மணி நேரம் பிரார்த்தனை பண்ணுவேன். என்னோட அப்பா, சித்தப்பா, அண்ணன் இவங்க மேல பெரியாரோட தாக்கம்தான் இதுக்குக் காரணம். அவங்க அவரைத் திட்டுவாங்க… விமர்சிப்பாங்க… அவரோட அறிவை எண்ணி உள்ளுக்குள் சிரிச்சிக்குவாங்க. ஆக, அவரோட எதிர் முகாமிலும் அவருக்கு ரசிகர்கள் இருந்தாங்க. நான் அந்த எதிர் முகாம்ல இருந்து வந்தவன்.
***
தபேல்கர் கொலை, நம்பிக்கை இழக்கச் செய்வதாக இருக்கலாம். ஆனால் அது நான் பேசவேண்டியதை பேசுவதிலிருந்து மாற்ற முடியாது. அதற்கு தமிழ்நாட்டுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். இங்கே நிறைய விஷயங்கள் தவறாவும் இருக்கு. கூவம், அடையாறு உட்பட நிறைய விஷயங்கள் சரி செய்யப்படல. அற்புதங்கள்ல எனக்கு நம்பிக்கையில்லை. ஆனா எனக்கு மேஜிக் மேல நம்பிக்கையிருக்கு. ஏதோ ஒன்றை பார்க்கத் தவறும்போது அந்த மேஜிக் நடக்கும். சினிமா அப்படிப்பட்டதுதான். அந்த மேஜிக்கை சினிமா உருவாக்குது. யார் வேணும்னாலும் மேஜிக்கை நிகழ்த்தலாம். கற்றல் என்கிற மிக மெதுவான செயல்முறையால் மாறுதல் நிகழணும்.
***
ராமாயணம் புராணம். அதுல எல்லாம் கலந்து கிடக்கு. நான் சின்னப்பையனா கன்னியாகுமரி போயிருந்தப்ப, ஒரு ஜோடி மிகப்பெரிய காலடித் தடத்தைக் காட்டுனாங்க. அப்ப நான் பக்தி மார்க்கத்துல இருந்தேன். அவங்க இது ராமனோட காலடித் தடம்னு சொன்னாங்க. அது ரொம்ப பெரிசா இருந்ததால, ராமன் என்ன ராட்சஷனான்னு கேட்டேன். பகுத்தறிவுக்கான என்னோட பாதை அங்க தொடங்கிச்சு.
– நன்றி: ஃப்ரண்ட் லைன், அக்டோபர் 18, 2013