துளிச் செய்திகள்

நவம்பர் 01-15
  • வியாழனைவிட எட்டு மடங்கு பெரிய கோளினைக் கண்டுபிடித்து அதற்கு எம்.ஓ.எ.2011_பி.எல் என்று பெயரிட்டுள்ளனர்.

  • நியூசிலாந்து நாட்டின் பெண் எழுத்தாளர் எலியனார் காட்டன் (வயது 28) எழுதிய தி லூமினரீஸ் என்ற நாவலுக்கு புக்கர் விருது (2013) வழங்கப்பட உள்ளது.
  • இணைய இணைப்புக்காக எல்இடி பல்புகளைப் பயன்படுத்தி சமிக்ஞைகளைக் கடத்தும் லைஃபை என்ற புதிய தொழில் நுட்பத்தை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
  • பூமியிலிருந்து 80 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள புதிய கிரகத்தைக் கண்டுபிடித்த அமெரிக்காவின் ஹவாயில் உள்ள விஞ்ஞானிகள் அதற்கு பி.எஸ்.ஓ.ஜெ 318.5_22 என்று பெயரிட்டுள்ளனர்.
  • செல்பேசி மூலம் ரயில் பயணச்சீட்டை முன்பதிவு செய்யும் வசதியை அய்.ஆர்.சி.டி.சி. அறிமுகப்படுத்தி உள்ளது.
  • தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து 15 கடல்மைல் தொலைவில் நுழைந்த எம்வி சீமேன் கார்டு ஓகியோ என்ற ரோந்துக் கப்பலினை அக்டோபர் 12 அன்று இந்தியக் கடலோரக் காவல் படையினர் பிடித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *