நாத்திக அறிவியலாளர் – ‍பீட்டர் மெடவார்

அக்டோபர் 01-15

சர் பீட்டர் ப்ரைன் மெடவார் (1915_1987) (Peter Medawar) பிரேசிலில் பிறந்த ஒரு பிரிட்டிஷ் உடற்கூறு இயலார். உடல் உறுப்பு மற்றும் மென்செதில் (tissue) மாற்று அறுவைச் சிகிச்சைக்கு மிக முக்கியமானதாகக் கருதப்படும் ஒட்டு மறுப்புகளுக்கும், எய்ட்ஸ் நோய் கண்டுபிடிப்புகளுக்கும் மென்செதில் மற்றும் உறுப்பு மாற்று அறுவைகளுக்கும் அடிப்படையாக அமைந்திருந்தது.

 

1960இல் சர் ஃபிராங் மேக்ஃபேர்மலன் பர்னெட்டு என்பவருடன் சேர்ந்து, உடலியலிலோ, மருத்துவத்துக்கோ, நோபெல் பரிசு அளிக்கப்பட்டது. மெடாவர் 1915ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 28ஆம் நாள் பிரேசிலில் உள்ள பெட்ரோ பொலிஸ் என்ற ஊரில், எடித் முரியல் டௌளிங் என்ற பிரிட்டிஷ் தாய்க்கும், நிக்கோலஸ் மெடவார் என்ற லெபனான் தந்தைக்கும் பிறந்தவர். அவர் தந்தை மெரோனெட் என்ற கிருத்துவ உட்பிரிவைச் சேர்ந்தவர். மெடாவரின் பிரிட்டிஷ் குடிமகன் என்ற அந்தஸ்து அவருடைய பிறவியினால் பெறப்பட்டது. அவர் அதைப்பற்றி, பிரிட்டிஷ் தூதரகத்தில் எனது பிறப்பு நல்லநேரத்தில் பதியப்பட்டு இருந்ததால், பிரிட்டிஷ் குடிமகன் அந்தஸ்து, இயற்கையான பிரிட்டிஷ் குடிமகன் என்ற நிலையினைப் பெறவைத்தது.

உலகப் போர் முடிவுறும் சமயத்தில் மெடாவர் பிரேசிலை விட்டுத் தனது குடும்பத்தாருடன் இங்கிலாந்தில் குடிபுகுந்தார். தனது பிற்கால வாழ்நாள் முழுவதையுமே அவர் இங்கிலாந்து நாட்டிலேயே கழித்தார். ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மெகதலின் கல்லூரி மால்பமரா கல்லூரிகளில் அவர் படித்து ஃபெல்லோ பட்டம் பெற்றார். அவர் பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் 1947_51இல் விலங்கியல் பேராசிரியராகவும் லண்டன் பல்கலைக்கழகத்தில் 1951_1962 வரையிலும் விலங்கியல் பேராசிரியராகவும் பணிபுரிந்துள்ளார்.

1962இல் அவர் தேசிய மருத்துவ ஆராய்ச்சிக் கல்விக் கூடத்தில் ஆணையராக நியமிக்கப்பட்டார். பிறகு 1977_83இல் ராயல் கல்விக்கூடத்தின் பரிசோதனை மருத்துவப் பேராசிரியராகவும், 1971_87இல் ராயல் பட்ட   மேற்படிப்பு மருத்துவக் கல்லூரியின் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

மெடாவர், புதிய கண்டு பிடிப்புகளுக்கான அறிவியலாளராக இருந்தும்கூட, இசை நாடகங்கள் (OPERA) தத்துவம், கிரிக்கெட் ஆகியவற்றில் நாட்டம் கொண்டி ருந்தார். 1965இல் அவருக்கு நைட் பட்டம் கொடுக்கப்பட்டது. 1981இல் ஆர்டர் ஆப் மெரிட் என்ற கவுரவ நிலையும் அளிக்கப்பட்டது.

இரண்டாம் உலகப் போரின் போதுதான் அவரது ஒட்டு மாற்று அறுவை சிகிச்சையில் அவர் ஈடுபட ஆரம்பித்தார். தோல் ஒட்டு சிகிச்சை பற்றி முடியக்கூடிய முன்னேற்றத்தைக் கண்டறிய ஆரம்பித்தார்.

பர்னெட் என்பவரால், 1949இல் தோல் ஒட்டு சாத்தியக் கூறுகள் பற்றி ஆராயப்பட்டது. பர்னெட், கரு உருவாவதிலிருந்து குழந்தை பிறப்பது வரையிலும் செல்கள் படிப்படியாகத் தன்னை சொந்த செதில் செல்கள் வேறுபடுத்திக் கொள்வதற்கான இயல்புகளை ஒருபுறமும், தேவையற்ற செல்களும், வேற்றுப் பொருள்களும் ஏற்றுக் கொள்ளும்படியான முன்னேற்றச் சாத்தியக் கூறுகள்பற்றி ஆராய்ந்தார். ரூபர்ட் பில்லிங்காம் என்பவருடன் சேர்ந்து 1951இல் அவர் 30 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார். சாந்தா ஜெ. ஓனோ என்ற அமெரிக்காவின் தடுப்புச் சிகிச்சை இயல் வல்லுநர் இந்த ஆய்வுக் கட்டுரை நவீன அறிவியலுக்குத் தொடர்ந்த நல்விளைவுகளை அளிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மெடாவர் 1960இல் பர்னெட் என்பவருடன் சேர்ந்து தோல் ஜவ்வு இணைப்புகள் பற்றிய ஆராய்ச்சிக்காக நோபெல் பரிசு பெற்றார். அதுதான் உறுப்புகள் மாற்று அறுவை சிகிச்சைகளுக்கும் எய்ட்ஸ் நோய் தாங்கும் சக்தி ஆகியவற்றிற்கும் அடிப்படையாக அமைந்தது. இந்த முறையானது, தீக்காயங்களால் பாதிக்கப்பட்ட தோல் ஒட்டுக்களைப் பயன்படுத்துவதற்குப் பயனுள்ளதாக இருந்தது. மெடாவரின் பணி தடுப்பு இயல் அறிவியலின் தாக்கத்தைவிட தடுப்பு இயல் செயல் முறையையே, உறுப்புகள் மாற்றம் செய்யும்போது, உடல் எதிர்த்துப் புறந்தள்ளும் போக்கை, உறுப்புமாற்று அறுவைகளின்போது தடுப்புத் தன்மையின் அமைப்பையே மாற்றுவதைக் கண்டறிந்தார்.

1951இல் மெடாவர் நிகழ்த்திய, உயிரியலில் ஒரு தீர்க்க முடியாத பிரச்னை என்ற பேருரை மூப்படைதலையும் அதன் காரணமாக ஏற்படும் இழப்புகளையும் பற்றியது. அவற்றை அவர், சாதாரணமாக வயது முதிர்வடைவதை ஒரு வார்த்தையால் நான் குறிப்பிட விரும்புகிறேன். வயது முதிர்வு என்பதே போதுமானதாக இருக்கும். அது வெறும் வயது முதிர்தலைத் தவிர வேறு ஒன்றையும் மறைமுகமாகக் கூடக் குறிப்பிடாது. இந்த வயது முதிர்தல், அத்துடன் உடல் இயல்புகள் வலுவிழந்து உணர்வுகளையும் சக்திகளையும் உடலைத் தானே இழந்து வருவதாகும்.

மதம் பற்றிய கருத்துகள்

மெடாவர், நாம் கடவுளை நம்பவில்லை என்பதற்கு ஒரு பொருத்தமான காரணத்தை நம்மால் காண முடியும். ஏனென்றால், கடவுள் இருக்கிறார்; ஏனென்றால், நாம் அதை நம்புகிறோம். உலகத்தின் ஒரு சிறு துகள் என்று நாம் கருதினால் கடவுள் அதே அளவு, மனம் உற்பத்தி செய்யும் மற்ற பொருள்களைப் போல, உண்மையின் பொருண்மையைக் கொண்டிருப்பார்.

கடவுளின் மீதுள்ள எனது நம்பிக்கையின்மைக்காகவும் மற்ற கடவுள் பற்றிய பொதுவான பதில்கள் பற்றியும் நான் வருத்தப்படுகிறேன். கடவுளைப்பற்றி நம்புவதற்குச் சரியான அறிவியல் மற்றும் தத்துவக் காரணங்களும், கடவுளைக் காண துணை புரிந்தால், அதைத் தேடும் பலருக்கு அது திருப்தியையும், அமைதியையும் கொடுக்கும். அறிவின் ஆட்சியைப் புறந்தள்ளுதலோ, அதற்குப் பதிலாக எந்த அளவிற்கு நாம் நமது நம்பிக்கையின் தன்மையை பழக்கத்தின் ஒரு நிலையில் திட்டமிட்டு நிலைநிறுத்தலோ ஆபத்தானதும் அழிவைத் தரக்கூடியதுமாகும்.

நான் ஒரு பகுத்தறிவுவாதி… தற்காலத்தில் பரவிவரும் ஒரு கருத்து அது என்பதை நான் ஒத்துக்கொள்ளுகிறேன்.

ஒரு சிறந்த ஆசிரியராக மெடாவர் அங்கீகரிக்கப்பட்டு உள்ளார். ரிச்சர்ட் டாகின்ஸ், எல்லா அறிவியல் எழுத்தாளர்களிடையேயும் நகைச்சுவையாக எழுத வல்லவர் மெடாவர் என்று குறிப்பிட்டுள்ளார். 1987இல் அவருக்கு, பொதுமக்களுக்கும் அறிவியலாளர்களுக்கும் உயர்ந்த தரத்தில் நுண்ணறிவுத் திறத்தாலும், மனிதர்களுக்கான அவசியத் தேவைகளினாலும், நவீன பண்பாட்டுத் திறத்திற்கும் அவர் ஆற்றிய பணிகளைப் பாராட்டி அவருக்கு மைக்கேல் ஃபாரடே பரிசு அளிக்கப்பட்டது.

1969இல் பிரிட்டிஷ் அமைப்பு ஆண்டுக் கூட்டுமொன்றில் பங்கெடுத்துக் கொண்டிருந்த போது, மெடாவருக்குப் பக்கவாதம் ஏற்பட்டது. அவருடைய உடல் நலக் குறைவு மருத்துவ அறிவியல், அரசாங்கத்துக்கும், அறிவியலார் சமுதாயத்திற்கும் ஆன உறவில் பல விளைவுகளைக் கொடுத்திருக்கலாம். அந்த நோய்ப் பாதிப்புக்கு முன் மருத்துவ உயிரியல் துறையில் பிரிட்டனின் மிகப் பெரிய சக்திவாய்ந்த அறிவியலாளராகத் திகழ்ந்தார். அவரது பேச்சுத் திறனும், நடந்துபோதலும் குறைந்ததால் தனது மனைவியின் துணையுடன் அவர் மிகவும் சுருக்கப்பட்ட வட்டத்தில் தனது ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். இருப்பினும், அதிக ரத்தப்போக்கு ஏற்பட்ட காரணத்தினால் 1987இல் மெடாவர் மரணமடைந்தார். அவர் உடல் கிழக்கு சஸ்ஸெகஸ் பகுதியில் உள்ள ஆப்ஃரிஸ்டானில் புதைக்கப்பட்டது.

இந்தக் காலகட்டத்தில் வாழ்ந்த சிறந்த அறிவியல் எழுத்தாளர் அவர்தான் என்று நியூ சயன்டிஸ்ட் இதழ் அவருக்குப் புகழாரம் சூட்டியது.

 

நீட்சே

தமிழில்: ஆர்.ராமதாஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *