அறிவியல் துறையில் சாதித்திட ஆரம்பக் கல்வியைத் தமிழ் வழியில் கற்றது ஊக்கமாக இருந்தது. மொழி என்பது இனத்தின் அடையாளம் மட்டுமல்ல; அது ஒரு சேமிப்புக் கிடங்கு, தகவல் சுரங்கம். காலம், தலைமுறையைக் கடந்து நிற்பது தாய்மொழிதான்.
– அப்துல் கலாம்,
மேனாள் குடியரசுத் தலைவர்
மக்களவையில் மசோதா தாக்கல் செய்வது என்பது அரசுக்கு உள்ள அதிகாரம். இதை ஏற்பதா இல்லையா என்பதை மக்கள் முடிவு செய்வர். நீதித்துறையின் செயல்பாடு சுதந்திரமாக இருக்க வேண்டியது முக்கியம். நீதித்துறைக்காகவோ நீதிபதிகளுக்காகவோ இதை நான் வலியுறுத்தவில்லை. மக்களுக்காக வலியுறுத்துகிறேன். – பி. சதாசிவம், தலைமை நீதிபதி, உச்ச நீதிமன்றம்.
வல்லுநர்களின் ஆலோசனைகள், அனுபவங்கள் ஆகியவற்றைப் புரிந்து கொள்ளும் வழிமுறைகள் நீதிபதிகளுக்கு இல்லை. எனவே, அரசின் திட்டங்களை அமல்படுத்துவதில் நீதித்துறையின் தலையீடுகள் இருக்குமேயானால் பிரச்சினைகள்தான் அதிகமாகும்.
– கபில்சிபல், மத்திய சட்ட அமைச்சர்