கிருஷ்ணன் மட்டும் வாழ்க!

செப்டம்பர் 16-30

ஒருமுறை செங்கல்பட்டில் அண்ணா முன்னின்று நடத்திய நடிகர்கள் மாநாட்டிற்கு பெரியார் தலைமை வகிக்கிறார். அதில் கலந்து கொண்டவர்கள் எல்லாம் மிகப் பெரிய நடிகர்கள். பி.யு.சின்னப்பா, எம்.கே. இராதா, என்.எஸ். கிருஷ்ணன் போன்றோர் எல்லாம் கலந்து கொண்டனர். அப்போது பெரியார் பேசுகிறார்: நீங்க ஒவ்வொருவரும் ரூ.50,000க்கு மேல்சம்பளம் வாங்குகிறீர்கள். இது என்ன நியாயம்? எனப் பெரியார் கேட்கிறார். நடிகர்கள் ஏற்பாடு செய்த மாநாட்டில் தான் பெரியார் இப்படிப் பேசுகிறார். உங்களுக்கு ரூ.50,000 சம்பளம் எனக் கேள்விப்படுகிறேன். ஆனால் விவசாயிகளுக்கு 5 ரூபாய் கூட சம்பளமாகக் கொடுப்பதில்லை. நீங்கள் எல்லாம் என்ன விவசாயிகளைவிட உயர்ந்தவர்களா? எனப் பெரியார் பேசுகிறார். இதனால் நடிகர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனே பெரியார் பேச்சுக்குப் பதில் சொல்ல வேண்டுமென நடிகர்கள் முடிவு செய்கின்றனர். உடனே என்.எஸ்.கே மேடையில் ஏறி ஒரு புள்ளி விவரக் கணக்கு கூறுகிறார். அய்யா, நான் இத்தனைப் படத்தில் நடித்தேன், இவ்வளவு சம்பளம், அதில் நலிந்த நாடக நடிகர்களுக்கும் மற்றும் பலருக்கும் உதவிகள் செய்துள்ளேன் என்கிற ஒரு கணக்கைச் சொல்கிறார். உடனே பெரியார் ஒலிபெருக்கியின் முன்வந்து, இவ்வளவும் கேட்ட பிறகு சொல்கிறேன், கிருஷ்ணன் வாழ்க, கிருஷ்ணன் மட்டும் வாழ்க என்று சொன்னாராம்.     தகவல்: சந்திரன் வீராசாமி, திருச்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *