சோற்றைத் தின்றுவிட்டு சும்மா இருப்பதா?

செப்டம்பர் 16-30

நேற்று குறிச்சி வைச்சேன் சொல்லலாம்னு.  நேற்று வந்து என்னைச் சந்தித்தவரு 90 வயசு ஆகுதே கொஞ்ச நாளைக்குச் சும்மாயிருங்களேன்னாரு. அடே பயித்தியக்காரா ஒரு ஆளு சோறு திங்கிறேன்.  கொஞ்சங் கொஞ்சமா சாப்பிட்டாலும் என் ஒருத்தனுக்கு செலவு ரூ200 ஆகுது.  ஒரு வேளை காபி, ஒரு வேளை பாலு, ஒரு நாளைக்கு அரைகிலோ கறி. கறி இல்லாமல் (இறைச்சி) சாப்பிடவே மாட்டேன்.  முட்டை அது இது எல்லாம். முன்பு ரூ.15லே அடங்கின செலவு இப்ப எனக்கு 200 ரூபாய் ஆகுது என் ஒருத்தன் செலவு.  எப்படி ஆகுதுன்னு கேட்பிங்க.  எட்டு பழம் மலைப்பழம் ஒரு பழம் இரண்டனா 1 டஜன் ஒன்னரை ரூபாய்.  இந்த மாதிரி நான் சாப்பிடுவது பொது மக்களுடைய பணம்தானே.  ஒரு மாசத்துக்கு 200 ரூபாய்க்குத் தின்னுட்டு நான் சும்மாயிருக்க வேணும்னா அது சரியல்ல.  ஆனதினாலே அய்யா என்னாலானதைப் பத்தில் ஒரு பங்காவது பொதுத் தொண்டு செய்யணும்னு சொன்னேன். அது மாதிரி மனிதன்னா தானுண்டு, தன் பொண்டுபிள்ளை உண்டுனு, சோறு தின்னுக்கிட்டு பொதுத் தொண்டு செய்யமாலிருப்பது- _ சுயவாழ்வை விட கேவலம் அது. நம்மாலே உலகத்துக்கு என்னா?  அதனாலே மக்கள் ஆணும் பெண்ணும் பக்குவமடைய வேணும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *