Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

மொழி எப்படி இருக்க வேண்டும்?

மனுஷனுக்கு மொழி வேணும்ன்னா, அந்த மொழியில் இருந்தே உணர்ச்சி கிளம்பணும். அறிவு வளர்ச்சியடையணும்.  விஞ்ஞானத்துக்கு எல்லாம் தோது இருக்கணும்.  தமிழிலே என்னா இருக்குது.  தமிழைக் காட்டுமிராண்டின்னு சொல்லிட்டாங்கிறான் யாரு?  சுத்தக் காட்டு மிராண்டிப்பசங்கதான் (கைத்தட்டல்) அதைச் சொல்றவங்க அறிவாளியில்லே. நான் சொல்றேன். நீங்களும், நானும் சண்டை பிடிச்சிக்கிட்டா, வாடா போடாங்கிறோம். வாத்தாங்கிறோம் (சிரிப்பு) அவுங்கம்மா இவுங்கம்மாங்கிறோம்.  அவனே, அவன் மகனே இவன் மகனேங்கிறோம். இதெல்லாம் தமிழ்லே இருக்குது. இந்தப் பேச்செல்லாம் ஆங்கிலேத்திலேயே கிடையாதே. (சிரிப்பு) ராணியாய் இருந்தாக் கூட அவள்தான் “Her Majesty”  ராணி அவளை அவள்ன்னுதான் கூப்பிடுகிறோம். “Her”ராஜாவாக இருந்தாலும் அவன் தான் “His Majesty”ன்னுதான்  சொல்லுகிறோம்.  நீ ஒரு ராஜாகிட்டே பேசறாப்பிலே இருந்தாலும் ஒரு பிரபுகிட்டே அவனுடைய வேலைக்காரன் பேசறாப்பிலே இருந்தாலும் நீ சீஷீ தான்.  ஒருத்தனுக்கு  நீ  அடா இன்னொருத்தன் அவனே (சிரிப்பு)  இன்னொருத்தனுக்கு இவனே இந்த மாதிரி மொழிபேதம் வைச்சிக்கிட்டு இருக்கிறதுன்னா  சமதர்மம்ன்னு வாயிலே பேசிக்கிட்டு, அடா, போடாங்கிற, பேச்சு வேணும்கிறியே, எதுக்காக வேணுங்கிறே?  இல்லே மனிதன் அறிவு இருக்குது. வளர வேணும்ங்கிறான். சமதர்மம் வேணுங்கிறான். என்னதுக்குப் பணக்காரன்கிறான்? என்னத்துக்கு முதலாளிங்கிறான்? அடாபுடா_-ங்கிற வார்த்தை மட்டும்  என்னத்துக்கு இருக்கணும்?  மனிதன் அடா புடான்னு வார்த்தையைத்  தமிழில் வச்சிக்கிட்டு அப்புறம் என்னா பண்ணுவான்.

நூல்: பெரியார் சிந்தனைத் திரட்டு